சாதாரண மாருதி காரை வாங்கியது அந்த பொண்ணா! உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னு தெரியுது! இவ்ளோ பெரிய ஆளா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). இது கரடு முரடான ஆஃப்ரோடு (Off-road) சாலைகளிலும் பயணிப்பதற்கு ஏற்ற எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். கடந்த ஜூன் மாத தொடக்கத்தில்தான், மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
விற்பனையில் மஹிந்திரா தார் (Mahindra Thar) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வரும் மாருதி சுஸுகி ஜிம்னி காரை, நடிகர்கள் (Actors) உள்பட பிரபலங்கள் பலரும் வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில் இளம் வயதுடைய பிரபலம் ஒருவர் தற்போது மாருதி சுஸுகி ஜிம்னி காரை வாங்கியுள்ளார்.

அவர் மமிதா பைஜூ (Mamitha Baiju) ஆவார். 22 வயதே நிரம்பிய இவர், மலையாள திரையுலகில் தற்போது பிரபலமான நடிகையாக உருவெடுத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் (Instagram) இவரை, சுமார் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதில் தமிழக இளைஞர்கள் கூட்டமும் அடங்கும்.
இதில் இருந்தே மமிதா பைஜூ எவ்வளவு பிரபலமானவர்? என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இவர் மாருதி சுஸுகி ஜிம்னி காரை டெலிவரி எடுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரல் (Viral) ஆக பரவி வருகின்றன. இதற்காக அவருக்கு நாம் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளலாம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலை (Price) 12.74 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.05 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
செயல்திறனை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி ஜிம்னி காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும். அதிகபட்சமாக 105 ஹெச்பி பவர் மற்றும் 134 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாருதி சுஸுகி ஜிம்னி காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) கொஞ்சம் கூட பஞ்சம் இல்லை.
இதில், 9.0 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி மற்றும் 6 ஏர் பேக்குகள் போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவில் மஹிந்திரா தார், ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha) மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னி போன்ற ஆஃப் ரோடு எஸ்யூவி கார்கள் மிகவும் பிரபலம். இதில் ஒரு காரை, மமிதா பைஜூ வாங்கியிருப்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம்தான். வரும் காலங்களில் அவர் இன்னும் நிறைய கார்களை வாங்க வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications