இந்த அப்பா, பையன் செய்யுற வேலை தெரிய வந்தா அம்பானியே ஷாக்காகிடுவாரு! 2023ல மட்டும் இவ்ளோத்த வாங்கி போட்டாங்களா
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர் தந்தையும், மகனுமான மம்மூட்டியும், துல்கர் சல்மானும். சிறந்த நடிப்பிற்காக அறியப்படும் இவர்களே, மற்றொரு விஷயத்திற்கும் ரொம்ப ஃபேமஸான நபர்களாக நாட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். சொகுசு கார்களை வாங்கிப் போடுவதுதான் அது. இந்தியாவில் மாசத்திற்கு ஒன்று என சொகுசு கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பவர்களாக அம்பானி குடும்பத்தினர் உள்ளனர். மாசத்திற்கு ஒன்னு என்னங்க, மனசு வைக்கும்போதெல்லாம் ஓர் புதிய விலை உயர்ந்த காரை அவர்கள் இறக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மாதிரியான ஓர் குடும்பத்தினருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மலையாள திரையுலகைச் சேர்ந்த மம்மூட்டியும், அவருடைய மகன் துல்கர் சல்மானும் இருக்கின்றனர். இவர்கள் சொகுசு கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் அவர்கள் ஏகப்பட்ட ஆடம்பர வகை கார் மாடல்களை வாங்கி குவித்திருக்கின்றனர்.

அப்படி என்ன கார் மாடல்களை எல்லாம் அவர்கள் சென்ற ஆண்டில் வாங்கினார்கள் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, தந்தை மகன் வாங்கியதிலேயே மிக மிக விலையுயர்ந்த மற்றும் பலரின் கவனத்தை ஈர்த்த கார் மாடல்களையும், அவற்றின் சிறப்புகளைப் பற்றியுமே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS600): மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மானால் சென்ற ஆண்டில் வாங்கப்பட்ட மிக மிக உயரிய விலைக் கொண்ட கார் மாடலாக இந்த வாகனம் காட்சியளிக்கின்றது. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

இந்த காருக்கு இந்தியர்கள் பணக்காரர்கள் மற்றும் உச்ச நட்சத்திரங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நட்சத்திர குடும்பத்தினர் வாங்கி இருக்கின்றனர். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3.35 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது தவிர இந்த காரை சிறப்பிக்கும் விதமாக 369 எனும் ஃபேன்சி எண்ணைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இதன் மதிப்பு மட்டுமே ரூ. 1.85 லட்சம் என கூறப்படுகின்றது. மசாஜ் மற்றும் அதிக காற்றோட்டத்தை உறுதி செய்யக் கூடிய இருக்கையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது 43.5 டிகிரி வரை சாயும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஆகையால், சொகுசான ரைடு அனுபவத்திற்கு இந்த காரில் சிறிதும் கஞ்சமிருக்காது. இதுதவிர, ஆர்ம் ரெஸ்ட், 11.6 அங்குல திரை, 590 வாட் பர்மெஸ்டர் 3டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், மேபேக் ஆம்பியன்ட் லைட், லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களும் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, சிறிய குளிர்சாதன பெட்டி, மரத்தாலான பேனல்கள் ஆகியவற்றையும் இந்த கார் தாங்கி இருக்கும்.
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஓ45எஸ் (Mercedes AMG A45S): சென்ற ஆண்டில் மம்மூட்டியால் வாங்கப்பட்ட மற்றுமொரு மெர்சிடிஸ் தயாரிப்பே இந்த ஏஎம்ஜி ஏ45எஸ் ஆகும். இது ஓர் ஹேட்ச்பேக் வகை சொகுசு கார் மாடலாகும். லக்சூரி அம்சங்கள் நிறைந்த இந்த கார் மாடலில் 2.0லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 415பிஎச்பி மற்றும் 500என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த கார் மாடலின் விலை ரூ.92.50லட்சத்திற்கும் அதிகம் ஆகும்.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7-Series): இது ஓர் செடான் வகை சொகுசு கார் மாடல் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ. 1.78 கோடி ஆகும். இந்த காரை தமிழ்நாட்டிலேயே அவர்கள் வாங்கி இருக்கின்றனர். ஆக்ஸைடு கிரே மெட்டாலிக் நிறத்தாலான காரையே அவர்கள் வாங்கி இருக்கின்றனர்.
மேலும், 740ஐ எம் ஸ்போர்ட் வேரியண்டையே வாங்கி இருக்கின்றனர். சொகுசு அம்சங்கள் நிறைந்த இந்த கார், அதிக திறனை வெளியேற்றுவதற்கும் பெயர்போன வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் டர்போசார்ஜட் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 375 பிஎச்பி மற்றும் 520 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த காரில் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று பல சிறப்பம்சங்களை இந்த காரில் காண முடியும். குறிப்பாக, இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும்.
ஃபெர்ராரி 296 ஜிடிபி (Ferrari 296 GTB): இதுவே மலையாள திரையுலகின் முதல் ஃபெர்ராரி சூப்பர் கார் மாடலாகும். ஆமாங்க, மலையாள திரையலகிலேயே இந்த கார் மாடலை வைத்திருக்கும் முதல் நபர் துல்கர் சல்மான்தான். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ.5.40கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரும் சென்ற ஆண்டிலேயே வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி இருவரும் மிகப் பெரிய கார் காதலர்களாகக் காட்சியளிக்கின்றனர். குறிப்பாக, காரை வாங்குவதில் மம்மூட்டியையே பின்னால் தள்ளிவிட்டார் அவரது மகன் துல்கர் என கூறலாம். அந்த அளவிற்கு அவர் தொடர்ச்சியாக புதிய கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









