பிரிய மனசே இல்ல! சாதாரண டாடா சுமோ காரை வாங்கியது அவரா! யார்னு தெரிஞ்சதும் ஆச்சரியத்தில் வாயை பிளக்கும் மக்கள்!

இந்திய மக்களின் மனதிற்கு நெருக்கமான கார்களின் பட்டியலை எடுத்தால், அதில் டாடா சுமோ (Tata Sumo) நிச்சயம் இடம்பிடித்திருக்கும். இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றில், டாடா சுமோ காருக்கு நிச்சயமாக தனி இடம் உண்டு. டாடா சுமோ கார் கடந்த 1994ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனைக்கு வந்த உடனேயே இந்திய வாடிக்கையாளர்களின் இதயங்களை டாடா சுமோ வென்று விட்டது. ஆனால் மிகவும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக இந்திய சந்தையில் இருந்து பிரியாவிடை பெற வேண்டிய கட்டாயத்திற்கு டாடா சுமோ தள்ளப்பட்டது.

Tata Sumo

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த பிறகு, அதாவது கடந்த 2019ம் ஆண்டு, டாடா சுமோ காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போதெல்லாம் டாடா சுமோ காரை இந்திய சாலைகளில் பார்ப்பது அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது. ஆனால் திரைப்படங்களில் இன்னமும் அவ்வப்போது டாடா சுமோ காரை நம்மால் பார்க்க முடிகிறது.

இதற்கு கண்ணூர் ஸ்குவாடு (Kannur Squad) திரைப்படம் ஒரு உதாரணம். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் கண்ணூர் ஸ்குவாடு திரைப்படம் வெளியானது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான கண்ணூர் ஸ்குவாடு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Kannur Squad

மலையாள திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான மம்முட்டி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவரேதான் இந்த திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். இந்த திரைப்படத்தில் டாடா சுமோ கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் டாடா சுமோ கார் ஒரு கேரக்டராகவே இருந்துள்ளது.

கண்ணூர் ஸ்குவாடு படம் முழுக்க மம்முட்டி, டாடா சுமோ காரில்தான் பயணம் செய்கிறார். எனவே இந்த டாடா சுமோ கார் மம்முட்டியின் மனதை கவர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே பிரிய மனம் இல்லாமல், கண்ணூர் ஸ்குவாடு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டாடா சுமோ காரை நிஜ வாழ்க்கையிலும் மம்முட்டி பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

ஆம், கண்ணூர் ஸ்குவாடு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டாடா சுமோ காரை மம்முட்டி வாங்கி விட்டார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், கண்ணூர் ஸ்குவாடு திரைப்படத்தை மம்முட்டிதான் தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனம் கண்ணூர் ஸ்குவாடு திரைப்படத்திற்காக 2 டாடா சுமோ கார்களை வாங்கியது.

இதில் ஒரு டாடா சுமோ கார் ஆக்ஸன் காட்சி படப்பிடிப்பின்போது கடுமையாக சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றொரு டாடா சுமோ சேதம் அடையவில்லை. எனவே மம்முட்டி அந்த டாடா சுமோ காரை பயன்படுத்த தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு, டாடா சுமோ ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் ஆகிய இருவருமே கார் காதலர்கள்தான். அதை நிரூபிக்கும் வகையில், அவர்களிடம் பல்வேறு விலை உயர்ந்த மற்றும் அரிதான கார்கள் இருக்கின்றன. இந்த கார்களின் பட்டியலில் தற்போது டாடா சுமோவும் இணைந்திருப்பது சிறப்பான ஒரு விஷயம் ஆகும்.

Article Published On: Tuesday, October 3, 2023, 17:51 [IST]
English summary
Mammootty buys tata sumo kannur squad video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+