அஜித் மாதிரியே சினிமாவிலிருந்து கார் ரேஸ்க்குள் வரும் புதிய பிரபலம்! இந்த நடிகரின் பேரனா இவர்?
பெங்களூருவில் நடைபெற்ற கோ கார்ட் கார் பந்தய போட்டியில் மலையாள நடிகர் மம்முட்டியின் மகள் வழி பேரன் எஸ்கான் கலந்து கொண்டார். இவர் இந்த போட்டியில் ரைசிங் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
கார் பைக்கை வேகமாக ஓட்ட வேண்டும் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் எஃப் 1 போன்ற ஒரு கார் போட்டியை பார்க்கவே நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்படியான ஒரு காரை தயார் செய்து எப்படி வேண்டுமானாலும் ஓட்டுங்கள் என நம் கையில் கொடுத்தால் எப்படி இருக்கும்.

இப்படி தான் கோ கார்ட் எனப்படும் புதிய வித கார் ஓட்டும் டிராக் பெங்களூருவில் இருக்கிறது கிட்டத்தட்ட எஃப்1 கார் போல வடிவமைக்கப்பட்ட கார்களை இங்கு செல்பவர்கள் சென்று ஓட்டி செல்லலாம். இந்நிலையில் இங்கு ஒரு ரேஸ் போட்டி ஒன்று கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது.
ரெட் ரேப்பிட் ரேசர் என்ற குழு சார்பில் ஆருணி கிரிட் பகுதியில் இந்த போட்டி நடத்தப்பட்டது இதில் ஏராளமான மக்கள் வந்து கலந்து கொண்டனர். குறிப்பாக கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு டிரைவ்ஸ்பார்க் குழு மீடியா பார்ட்னராக பங்கேற்றது.
இந்த போட்டியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகள் வழி பேரன் எஸ்கான் கலந்து கொண்டார். இவர் இந்த போட்டியில் பங்கேற்று ரைசிங் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். இந்த போட்டியில் ஏகப்பட்ட கார் பந்தை ஆர்வலர்களுக்கு கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுச் சென்றனர்.
இந்தப் போட்டியில் பரிசு வென்ற அத்தனை வீரர்களும் சிங்கப்பூரில் நடக்க உள்ள எப் 1 கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை நேரில் காண்பதற்கான வாய்ப்பை பெறுகின்றனர். இந்த போட்டியை நடத்தி வரும் ரெட் ரேபிட் ரேசர்ஸ் குழு இந்தியாவில் ரேசர்களை சர்வதேச ஆட்டோ ஸ்போர்ட் பந்தயத்தை தயார் படுத்தி அனுப்பியுள்ளது.
இந்த கோ கார்ட் கார் பந்தயம் பணக்காரர்களுக்கான கால் பந்தயம் மட்டும் என நீங்கள் நினைக்க வேண்டாம். இதில் கலந்துகொண்ட பல வீரர்கள் பல்வேறு விதமான பொருளாதார சூழ்நிலைகளிலிருந்து வந்தவர்கள் தான் என ரெட் ரேபிட் குழு தெரிவித்துள்ளது. இந்த ரெட் ரேபிட் ரேசர்ஸ் குழுவில் உள்ள பல வீரர்கள் சர்வதேச அளவில் பல்வேறு கார்பன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற கார்ட்ட்ரோம் எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓவரால் நேசன் கோப்பையை இந்த ரெட் ரேபிட் ரேசர்ஸ் குழுவில் உள்ள ரேசர் தான் தட்டிச் சென்றுள்ளார் இதே போட்டியில் ஆல் ஓவர் கார்ப்பரேட் கோப்பைக்கான மூன்றாவது இடத்தையும் இந்த குழுவைச் சார்ந்த ரேஸர் தான் பெற்றுள்ளார்.
இந்த ரெட் ரேபிட் ரேசர் என்பது ரேஸர் குழு மட்டுமல்லாமல் காட்டு ஃபிட்டிங், கார்டு செட்டப், கார்ட் டைனமிக்ஸ், பிரேக்கிங் மெக்கானிக்கல் செயல்முறைகள் டேட்டா அனலைசிஸ் போன்ற சேவைகளையும் வழங்கி வருகின்றனர். இதனால் கார் பந்தயத்தில் இந்த குழு தகுதி வாய்ந்த பல ரேசர்களை கொண்ட குழுவாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ஓட்ட விரும்பும் பல விரும்பிகளுக்கு இந்த கோ கார்ட் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கிறது. நேரடியாக காரை பந்தயமாக இல்லாமல் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் விலை குறைவாகவும் இந்த கோ கார்ட்டில் பந்தயம் நடத்துவது அதன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. நடிகர் மம்மூட்டியின் பேரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கான மேலும் ஒரு முக்கியத்தை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications