மம்முட்டி குறித்து மிக வேகமாக பரவும் புதிய செய்தி இதுதான்.. ரகசியத்திற்கு விடை அறிய ரசிகர்கள் ஆர்வம்
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தொடர்பான செய்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ரகசியத்திற்கு விடை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் மம்முட்டி. இவரது மகன் துல்கர் சல்மானும் தற்போது மலையாள திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் மிக தீவிரமான ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் ஆவர்.

குறிப்பாக மம்முட்டி விலை உயர்ந்த கார்கள் மீது அதிக ஆர்வம் காட்ட கூடியவர். அவரிடம் பல்வேறு எஸ்யூவி, லக்ஸரி செடான் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் உள்ளன. இதில், ஜாகுவார் எக்ஸ்ஜே எல், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ், போர்ஷே கேயென் எஸ் டீசல் ஆகியவை குறிப்பிடத்தகுந்த கார்கள் ஆகும்.

இதுதவிர டொயோட்டா லேண்ட் க்ரூஸர், ஆடி ஏ7 ஸ்போர்ட்பேக் மற்றும் மினி கூப்பர் எஸ் ஆகிய கார்களும் மம்முட்டியிடம் உள்ளன. கார்கள் மீதுதான் மம்முட்டிக்கு ஆர்வம் அதிகம் என்பதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த சூழலில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி சமீபத்தில், டீலர்ஷிப் ஒன்றில் ஜாவா கிளாசிக் ரெட்ரோ மோட்டார்சைக்கிளை பார்வையிட்டுள்ளார். nihadnvajid என்ற இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் இது தொடர்பான புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

ஆனால் மம்முட்டி தனக்காக ஜாவா கிளாசிக் மோட்டார்சைக்கிளை வாங்கியுள்ளாரா? அல்லது வெறுமனே போஸ் மட்டும்தான் கொடுத்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சூழலில் உன்னி முகுந்தனும், மம்முட்டியுடன் சென்றுள்ளார்.

உன்னி முகுந்தனும் மலையாள திரையுலகில் பிரபலமான ஒரு நடிகர்தான். இவர் சமீபத்தில் இதே ஷோரூமில் ஜாவா கிளாசிக் பைக்கை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வைரலாக பரவி வரும் மற்றொரு படத்தில் மம்முட்டியும், உன்னி முகுந்தனும் பைக் மீது ஒன்றாக அமர்ந்துள்ளனர்.

பைக்கின் முன் இருக்கையில் மம்முட்டியும், பின் இருக்கையில் உன்னி முகுந்தனும் அமர்ந்துள்ளனர். சரி, இனி ஜாவா கிளாசிக் பைக்கிற்கு வருவோம். ஜாவா கிளாசிக் பைக்கில், 293 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதில், 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்ப்படுகிறது. ஜாவா கிளாசிக் மோட்டார்சைக்கிள் ஒரு லிட்டருக்கு 37.5 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது.

ஜாவா கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலின் விலை 1.64 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) இருந்து தொடங்குகிறது. இது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கான விலையாகும். ஜாவா மோட்டார்சைக்கிள்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்திய மார்க்கெட்டிற்கு மீண்டும் வந்தன.

ஜாவா கிளாசிக் தவிர ஜாவா 42 என்ற மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டைலை தவிர்த்து விட்டு பார்த்தால், பல்வேறு விஷயங்களில் ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 மாடல்கள் ஒன்றுபடுகின்றன.

இதில், ஜாவா கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலானது உண்மையான பழைய ஜாவா பைக்குகளை போலவே உள்ளது. அதே சமயம் ஜாவா 42 மோட்டார்சைக்கிள் மாடலானது, தோற்றத்தில் மிகவும் ''மாடர்ன்'' ஆக காட்சியளிக்கிறது.

இங்கே மம்முட்டியுடன் காணப்படும் ஜாவா கிளாசிக் பைக், பழைய ஜாவா 250 சீரிஸ் பைக்குகளை நினைவுபடுத்துவது போல் உள்ளது. கிளாசிக் லெஜெண்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவிற்கு வந்துள்ளன.

ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது.

இதன் காரணமாக ஜாவாவின் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள்களின் விற்பனை தொடர்ந்து ஒரு சில மாதங்களாக சரிவடைந்தது. ஆனால் டெலிவரியில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் காரணமாக ஜாவா ரசிகர்கள் சற்று அதிருப்தியடைந்துள்ளனர்.

முன்பதிவு செய்துள்ள பலருக்கும் இன்னும் பைக்குகள் கைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தங்கள் அதிருப்தியை கொட்டி தீர்த்து வருவதால், எதிர்காலத்தில் ஜாவா பைக்குகளின் விற்பனை எப்படி இருக்கும்? என்பதை சரியாக கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








