இந்த காரை எல்லாம் ரோட்ல பாக்கறதே அபூர்வம்... இதுல வந்தது யார்னு தெரிஞ்சா இன்னும் அசந்து போயிருவீங்க...

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மம்முட்டி (Mammootty). இவரும், இவரது மகன் துல்கர் சல்மானும் (Dulquer Salman) கார் ஆர்வலர்கள் ஆவர். இவர்களிடம் மிகவும் விலை உயர்ந்த கார்கள் ஏராளமாக இருக்கின்றன. அத்துடன் கிளாசிக் கார்களையும் கூட இவர்கள் வைத்துள்ளனர்.

இதில் ஒன்றுதான் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி (Land Rover Defender SUV). மம்முட்டி மற்றும் துல்கர் சல்மானிடம் பழைய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை என 2 வகையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களும் உள்ளன. இந்த சூழலில் பழைய தலைமுறை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் மம்முட்டி வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

Land Rover Defender

இந்த வெள்ளை நிற கார் தமிழ்நாடு (Tamil Nadu) பதிவு எண்ணை பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். துல்கர் சல்மானின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த காரில், 2.5 லிட்டர் 5 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக 122 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த கிளாசிக் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் மம்முட்டி வந்தது ஒரு ஹோட்டல் என கூறப்படுகிறது. அனேகமாக பட ப்ரோமேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மம்முட்டி இந்த காரில் அங்கு வந்திருக்கலாம்.

Mammootty

மம்முட்டி தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்களை வாங்கி கொண்டே இருக்கும் நபர்களில் ஒருவர் ஆவார். மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் (Mercedes-Benz AMG A45 S) கார்தான், மம்முட்டி சமீபத்தில் வாங்கிய புதிய கார் ஆகும். இந்த காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 415 பிஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காரின் 4 சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி செலுத்தப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 87.50 லட்ச ரூபாய் என்ற விலையில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மம்முட்டி மற்றும் துல்கர் சல்மானின் கராஜில், இது போன்ற கார்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வாகனங்களும் (Electric Vehicles) கூட இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் பெயர் செய்திகளில் அடிக்கடி வருகிறது. இதற்கு சினிமா மட்டும் காரணம் அல்ல. கார்களின் மீதான அவர்களின் காதலும் ஒரு காரணமாக இருக்கிறது. வரும் காலங்களில் அவர்கள் இன்னும் நிறைய கார்களை சொந்தமாக்க டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாழ்த்துக்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 14, 2024, 14:39 [IST]
English summary
Mammootty spotted in land rover defender suv viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+