அழகுல தேவதைகளையே ஓரங்கட்டீட்டாங்க... அம்பானியே ஆச்சரியப்படும் விலையில் எலெக்ட்ரிக் காரை வாங்கனது அவரா!
தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மம்தா மோகன்தாஸ் (Mamta Mohandas). நடிகை என்பதை கடந்து, பாடகி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போன்ற முகங்களும் மம்தா மோகன்தாசுக்கு உள்ளன. இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அது போர்ஷே டைகன் (Porsche Taycan) ஆகும். இது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் (Electric Sports Car) ரகத்தை சேர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் போர்ஷே டைகன் காரின் ஆரம்ப விலை 1.61 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.44 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் காரின் எந்த வேரியண்ட்டை நடிகை மம்தா மோகன்தாஸ் வாங்கியுள்ளார்? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.

போர்ஷே டைகன் காரில் மொத்தம் 2 வகையான பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) கொடுக்கப்பட்டுள்ளன. அவை 79.2 kWh மற்றும் 93.4 kWh ஆகியவை ஆகும். இதில், முதலாவது பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 431 கிலோ மீட்டர்கள் எனவும், 2வது பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 452 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யக்கூடிய தொலைவுதான், டிரைவிங் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை போர்ஷே டைகன் வெறும் 2.80 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 260 கிலோ மீட்டர்களாக உள்ளது.

நடிகை மம்தா மோகன்தாஸ் போர்ஷே கார்களின் தீவிரமான ரசிகை ஆவார். ஏனெனில் அவரிடம் இதற்கு முன்பாக போர்ஷே 911 கரீரா எஸ் (Porsche 911 Carrera S) ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று இருந்து வந்தது. ஆனால் அந்த காரை நடிகை மம்தா மோகன்தாஸ் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாகதான் தற்போது போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் காரை மம்தா மோகன்தாஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது புதிதாக வாங்கியுள்ள போர்ஷே டைகன் தவிர, பிஎம்டபிள்யூ இஸட்4 கன்வெர்டபிள் (BMW Z4 Convertible) கார் ஒன்று மம்தா மோகன்தாஸிடம் உள்ளது.
மம்தா மோகன்தாஸின் கார் கலெக்ஸனை (Car Collection) கவனித்தாலே நமக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும். அவர் வாங்குவது எல்லாமே ஸ்போர்ட்ஸ் கார்களாகவே உள்ளன. பொதுவாக நடிகைகள் எல்லாம் சொகுசு கார்களைதான் வாங்குவார்கள். ஆனால் மம்தா மோகன்தாஸோ, ஸ்போர்ட்ஸ் கார்களையே அதிகம் வாங்குகிறார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகைகள் போன்ற பிரபல மனிதர்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவது நல்ல விஷயமாக தெரிகிறது. இது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவி செய்யும். எனவே பொதுமக்களும் அதிகளவில் எலெக்ட்ரிக் கார்களை வாங்க முன்வருவார்கள்.
இது இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவி செய்வதோடு, வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவையும் குறைக்க உதவி செய்யும். இந்த 2 காரணங்களுக்காகவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








