25 லட்ச ரூபா காரை வாங்க 1 கோடி ரூபா காரில் வந்தது இந்த நடிகைதானா? அவரது ரேஞ்சுக்கு இது எல்லாம் சாதாரணம்!!
மம்தா மோகன்தாஸ் (Mamta Mohandas), மலையாள நடிகையாக இருப்பினும் தென்னிந்திய அளவில் கவனத்தை பெற்றவர். தமிழில் நடிகர் விஷால் உடன் சிவப்பதிகாரம் திரைப்படத்தில் அறிமுகமாகியவர், அதன்பின் நடிகர் ரஜினியின் குசேலன், தடையற தாக்க, எனிமி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் திரைக்குவந்த நடிகர் விஜய் சேதுபதியின் மஹாராஜா திரைப்படத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இவர் மலையாளத்தில் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் தமிழில் மிகவும் குறைவுதான். அந்த அளவிற்கு மலையாளத்தில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார்.
இவை தவிர்த்து பல தெலுங்கு மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், பல திரைப்படங்களில் பாடல்களுக்கு நடனமாட மட்டும் செய்துள்ள நடிகை மம்தா மோகன்தாஸ் தற்போது புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) காரை வாங்கி உள்ளார்.

குடும்பத்துடன் ஷோரூமுக்கு வந்து பிராண்ட்-நியூ இன்னோவா ஹைகிராஸ் காரை நடிகை மம்தா மோகன்தாஸ் டெலிவிரி பெற்றுள்ளதை சம்பந்தப்பட்ட டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளது. மலையாள சினிமாவில் விலையுயர்ந்த கார்கள் மீது ஆர்வம் கொண்ட நடிகர், நடிகைகள் பலருள் நடிகை மம்தா மோகன்தாஸ் ஒருவராவர்.
குறிப்பாக, கடந்த சில வருடங்களாக கோடி ரூபாய்களில் விலை கொண்ட சில சொகுசு கார்களை அடுத்தடுத்து இவர் வாங்கி போட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் பிஎம்டபிள்யூ இசட்4 எம்40ஐ (BMW Z4 M40i) மற்றும் போர்ஷே டைகன் இவி (Porsche Taycan EV) எலக்ட்ரிக் கார் என இரு விலையுயர்ந்த கார்களை மம்தா மோகன்தாஸ் வாங்கி இருந்தார்.
இவை இல்லாமல், போர்ஷே 911 கர்ரேரா எஸ் (Carrera S) காரும் இந்த மலையாள நடிகையிடம் உள்ளது. இவற்றுடன் ஒப்பிடும்போது, தற்போது வாங்கியிருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் ஆனது மிகவும் விலை குறைவானது ஆகும். இந்த டொயோட்டா காரை வாங்க மம்தா ஷோரூமுக்கு வந்ததே பிஎம்டபிள்யூ இசட்4 எம்40ஐ என்கிற கோடி ரூபாய் விலை கொண்ட காரில் ஆகும்.
அதுவே, அவர் டெலிவிரி எடுக்க வந்த இன்னோவா ஹைகிராஸ் என்கிற ஹைப்ரீட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.25 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. பல விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இன்னோவா ஹைகிராஸ் காரின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.41.28 லட்சம் வரையில் உள்ளன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை எல்லாமே காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
வழக்கமான டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காரை காட்டிலும் நீளமான மற்றும் அகலமானதாக உருவாக்கப்படும் இன்னோவா ஹைகிராஸ் கார் ஆனது 7-சீட்டர் மற்றும் 8-சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எலக்ட்ரிக் மோட்டார் உடன் இந்த காரில் வழங்கப்படும் 2 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 184 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 40 வயதான நடிகை மம்தா மோகன்தாஸ் கடந்த காலங்களில் இருந்து பல சவாலான பிரச்சனைகளை கடந்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக புது, புது கார்களை வாங்கி வருவதை வைத்து பார்க்கும்போது, தற்போதுதான் இவரது வாழ்க்கையில் கொஞ்சம் நிம்மதி கிடைத்துள்ளது போல் தோன்றுகிறது. புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் வாங்கிய ராசி மம்தா மோகன்தாஸுக்கு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









