15 வருடங்களுக்கு பிறகு பைக் ஓட்டி பார்த்த பிரபல நடிகை!! ஹார்லி-டேவிட்சன் உடன் துபாயில்...

நடிகர், நடிகைகள் அவ்வப்போது லக்சரி வாகனங்களில் வெளியே வருவதை பார்த்திருக்கிறோம். இதற்கு அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் வாகனம் சொகுசு கார் தான்.

15 வருடங்களுக்கு பிறகு பைக் ஓட்டி பார்த்த பிரபல நடிகை!! ஹார்லி-டேவிட்சன் உடன் துபாயில்...

ஏனெனில் கார்களில் தான் யாரும் பார்க்காத அளவிற்கு மறைவாக செல்ல முடியும். ரசிகர்கள் யாராவது பார்த்துவிட்டால் பெரும் கூட்டம் கூடிவிடும். இது பெரும் பிரச்சனையாகுவதற்கு கூட வாய்ப்புள்ளது.

15 வருடங்களுக்கு பிறகு பைக் ஓட்டி பார்த்த பிரபல நடிகை!! ஹார்லி-டேவிட்சன் உடன் துபாயில்...

இதனால் தான் பிரபலங்கள் கிடைக்கும் ஓய்வு நேரங்களை வெளிநாடுகளில் கழிக்க விரும்புகின்றனர். இந்த வகையில் துபாய் சென்றுள்ள பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் காலியான பக்ரைன் சாலை ஒன்றில் ஹார்லி-டேவிட்சன் பைக்கில் பயணம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவினை தான் மேலே பார்க்கிறீர்கள். காலி சாலையாக இருப்பினும் அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஹெல்மெட் உடன் இந்த மோட்டார்சைக்கிள் ரைடை மம்தா மோகன்தாஸ் மேற்கொண்டுள்ளார்.

15 வருடங்களுக்கு பிறகு பைக் ஓட்டி பார்த்த பிரபல நடிகை!! ஹார்லி-டேவிட்சன் உடன் துபாயில்...

மேலும் இந்த வீடியோவில் பதிவில், தான் சினிமா துறையை தேர்வு செய்ததற்கு முன்னர் பெங்களூர் சாலையில் பைக் ஓட்டியுள்ளதாக கூறும் மம்தா மோகன்தாஸ், அதன்பின் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மோட்டார்சைக்கிள் ஒன்றை ஓட்டி பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.

15 வருடங்களுக்கு பிறகு பைக் ஓட்டி பார்த்த பிரபல நடிகை!! ஹார்லி-டேவிட்சன் உடன் துபாயில்...

வீடியோ மட்டுமின்றி இந்த மோட்டார்சைக்கிள் ரைட் தொடர்பான படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என பல தென்னிந்திய மொழி படங்களில் மம்தா மோகன்தாஸ் நடித்து வருகிறார்.

15 வருடங்களுக்கு பிறகு பைக் ஓட்டி பார்த்த பிரபல நடிகை!! ஹார்லி-டேவிட்சன் உடன் துபாயில்...

தமிழில் இவரது நடிப்பில் எனிமி (Enemy) என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ‘அவன் இவன்' படத்திற்கு பிறகு விஷால் மற்றும் ஆர்யா ஒன்றாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மிர்னலினி ரவி நடிக்கிறார்.

15 வருடங்களுக்கு பிறகு பைக் ஓட்டி பார்த்த பிரபல நடிகை!! ஹார்லி-டேவிட்சன் உடன் துபாயில்...

எனிமி படத்தின் டீசர் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படவுள்ளது. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பான்மையான பகுதி மலேசியாவில் படமாக்க முதலில் திட்டமிடப்பட்டது.

15 வருடங்களுக்கு பிறகு பைக் ஓட்டி பார்த்த பிரபல நடிகை!! ஹார்லி-டேவிட்சன் உடன் துபாயில்...

ஆனால் அதன்பின் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் துபாயிற்கு மாற்றப்பட்டது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ள மம்தா மோகன்தாஸ் ஓய்வு நேரத்தில் இந்த மோட்டார்சைக்கிள் பயணத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

15 வருடங்களுக்கு பிறகு பைக் ஓட்டி பார்த்த பிரபல நடிகை!! ஹார்லி-டேவிட்சன் உடன் துபாயில்...

நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதும், தேவையான நேரங்களில் பாடல்களை பாடி கொடுப்பதையும் மம்தா மோகன்தாஸ் வாடிக்கையாக கொண்டுள்ளார். புற்றுநோயுடன் போராடி வென்று காட்டியுள்ள இவர், அவரது ரசிகர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mamtha Mohandas sets the internet on fire! Fans go crazy as she rides a Harley Davidson.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X