டெய்லி மெட்ரோல டிராவல் பண்ணவருக்கு வந்த புதிய யோசனை! இவர் பண்ண சாதனையை பத்தி தான் ஊரே பேசிட்டு இருக்குது!

டில்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 18 மணி நேரத்தில் 286 மெட்ரோ ஸ்டேஷன்களை கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2021 ஆம் ஆண்டு இவர் செய்த சாதனைக்கு தற்போது அங்கீகாரம் கிடைத்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

டில்லியை சேர்ந்த இளைஞர் சேஷாங்க் மனு, இவர் தினமும் தனது பணிக்காக மெட்ரோவில் பயணித்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது இவர் மனதில் தனது மெட்ரோ பயணத்தையே ஏன் ஒரு சாதனையாக மாற்ற கூடாது என யோசித்தார். அப்பொழுது அவர் மனதில் தோன்றிய விஷயம்தான் குறைவான நேரத்தில் அதிக மெட்ரோ ஸ்டேஷனுக்கு கடக்கும் சாதனை.

மெட்ரோவில் கின்னஸ் சாதனைdelhi metro Guinness record

இதற்காக அவர் கின்னஸ் சாதனை குழுவிடம் பேசினார் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்த அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு தனது சாதனையை செய்ய அவர் திட்டமிட்டார். ஆனால் அவர் சாதனை செய்ய நினைத்த நேரம் கொரோனா நேரம் என்பதால் பல கட்டுப்பாடுகள் இருந்தது. அந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தான் இவர் சாதனை செய்ய வேண்டியது இருந்தது.

அதன்படி இவர் அதிகாலை 5 மணிக்கே டில்லி மெட்ரோவில் உள்ள ப்ளூ லைனில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். இவர் மெட்ரோவில் பயணிக்க ஒரு நாள் டூரிஸ்ட் கார்டை எடுத்துக் கொண்டார். இந்த கார்டை வாங்கினால் ஒரு நாள் முழுவதும் டெல்லி மெட்ரோவில் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இவர் சரியாக இரவு 8:30 மணிக்கு பிரிகேடர் ஹோஸிகர் சிங் ஸ்டேஷனில் தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.

மெட்ரோவில் கின்னஸ் சாதனைdelhi metro Guinness record

இவர் ஒரே நாளில் 348 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்துள்ளார். வழியில் உள்ள 286 மெட்ரோ ஸ்டேஷன்களையும் இவர் கடந்துள்ளார். அதாவது 15 மணி நேரம் 22 நிமிடம் 49 நொடியில் இவர் அத்தனை ஸ்டேஷன்களையும் கடந்துள்ளார். இந்த சாதனையை அவர் 2021 ஆம் ஆண்டு செய்துள்ளார்.

இவர் தனது ஒவ்வொரு பயணத்தையும் புகைப்படமாக பதிவு செய்துள்ளார். இது போக எந்த இடத்திலும் கட் செய்யப்படாத தொடர்ந்து ஓடும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இது போக கடைசியாக தன்னுடன் பயணிக்கும் பயணிகளிடம் தான் பயணத்திற்காக பயணம் செய்ததற்கான ஆதாரத்தை கையெழுத்தாக வாங்கியுள்ளார். இவரது முழு பயணத்திற்கு இரண்டு பேர் சாட்சியாக இருந்துள்ளனர்.

மெட்ரோவில் கின்னஸ் சாதனைdelhi metro Guinness record

இந்த உலக சாதனையை படைத்த பின்பு அவர் இது குறித்து ஆவணங்களை கின்னஸ் குழுவினருக்கு அனுப்பிய பிறகு அவர்கள் இது குறித்து ஆய்வுகளை செய்து விசாரணை நடத்தி பின்னர் இதற்கான ஒப்புதலை கடந்த ஏப்ரல் மாதம் வழங்கினர். தற்போது மனு கையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெட்ரோ என்பது பெரு நகரங்களுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. டெல்லியில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மெட்ரோ ஸ்டேஷன்கள் இருக்கின்றன. இந்நிலையில் இவர் செய்த சாதனை மெட்ரோ பயணம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 27, 2023, 17:30 [IST]
English summary
Man achieves guinness world record by visiting all 286 delhi metro stations in just 15 hours
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X