அமெரிக்காவில் செட்டில் ஆன இந்தியர்களிலேயே இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்! அங்கு வாங்கிய கார் இப்போது இந்தியாவில்
மெர்சிடிஸ் (Mercedes) வாகனங்கள் அவற்றின் வலிமையான உடல் தரத்தினாலும், நீடித்து உழைக்கும் ஆயுட் காலத்தினாலும் உலகம் முழுவதும் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. குறிப்பாக, மெர்சிடிஸ் ஜி-வேகன் (G-Wagon) கார் ஆனது இராணுவ வாகனங்களை போன்று எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லக்கூடிய வாகனம். இந்த வாகனத்தின் தரத்தை வெளிக்காட்டும் விதமாக, அமெரிக்காவில் இருந்து ஒருவர் இந்தியாவிற்கு மெர்சிடிஸ் ஜி-வேகன் காரை ஓட்டி வந்துள்ளார். யார் அந்த நபர் என்பதையும், அவரது அமெரிக்கா- இந்தியா பயணத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. வான்வெளியில் விமானங்களில் பயணம் செய்வதை காட்டிலும் இவ்வாறு சாலை வழியாக பயணம் செய்யும்போது வழியில் உள்ள அனைத்து இயற்கை பேரழகையும், அங்கு வாழும் மக்களின் கலாச்சாரங்களையும் நேரில் காணலாம்.

மேலும், வெவ்வேறான பகுதிகளுக்கு செல்ல செல்ல அந்த கலாச்சாரங்கள் எவ்வாறு மாற்றம் காண்கின்றன என்பதையும் காண முடியும். இவ்வாறு சாலை வழியாக ஒரு கண்டம் விட்டு இன்னொரு கண்டத்திற்கு பயணம் செய்வதில் உள்ள சவால் என்னவென்றால், இந்த பயணத்திற்கு நாள் கணக்கில் அல்ல, மாதக் கணக்கில் ஆகும்.
இருப்பினும், இதனை சுவாரஸ்யமாக எடுத்துக் கொண்டு இவ்வாறான பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அவ்வாறுதான் இங்கு ஒருவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் காரில் வந்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு முற்றிலுமாக சாலை வழியாக வர முடியாது.

ஏனெனில், இடையில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளதால், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு அல்லது ஆப்பிரிக்காவுக்கு கப்பல் வழியாக வந்தே அங்கிருந்து இந்தியாவிற்கு சாலை வழியாக வர முடியும். இதில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க வழியை தேர்வு செய்வது இல்லை. நாம் இந்த தொகுப்பில் பார்க்கும் நபர் கூட ஐரோப்பா வழியாகவே இந்தியாவிற்கு தனது சொந்தமான ஜி-வேகன் காரை ஓட்டி வந்துள்ளார்.
இவரது பெயர், நவ்டெஸ் தத்வால் (Navtez Dadwal). இந்தியாவின் கோவாவில் பிறந்தவரான இவர் அமெரிக்காவுக்கு 20 வருடங்களுக்கு முன்னர் குடிபெயர்ந்தார். அங்கு வேலை செய்து அந்த பணத்தில் விலையுயர்ந்த ஜி-வேகன் காரை வாங்கியவர், அதனை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவந்துள்ளார். இதற்கு 110 நாட்களில் சுமார் 44 ஆயிரத்துக்கும் அதிகமான தொலைவிற்கு இந்த நபர் கார் ஓட்டியுள்ளார்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலும் இந்த லக்சரி எஸ்யூவி வாகனம் விற்பனையில் உள்ளது. நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த பென்ஸ் கார்களுள் ஒன்றாக ஜி-வேகன் விளங்குகிறது. இது இல்லாமல், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான மிக நெடுந்தூர பயணங்களுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் போன்ற வாகனங்கள் தான் மிகவும் ஏற்றவை ஆகும். இத்தகைய பயணங்களில் எல்லாமே சுவாரஸ்யமானதாக இருக்கும். இடையில் சில நாட்களில் முற்றிலுமாக வாகனத்தை ஓட்டவே முடியாத சூழல் ஏற்படும். அதிக பணம் செலவு செய்ய நேரிடும். ஆனால், இந்த பயணத்தை நவ்டெஸ் தத்வாலை போன்று மேற்கொண்டவர்களால் எளிதில் மறக்க முடியாது.


Click it and Unblock the Notifications









