Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிஜ பாகுபலியா? வறுமையின் அடையாளமா? தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ
தலையில் பைக்கை சுமந்து கொண்டு, பேருந்தின் மீது ஏறிய தொழிலாளியின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமூக வலை தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை இந்த வீடியோ உருவாக்கியுள்ளது. டாக்டர் அஜயிதா என்பவர் டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தொழிலாளி ஒருவர் மேல் பகுதியில் வைப்பதற்காக, தன் தலையில் பைக் ஒன்றை சுமந்து கொண்டு பேருந்தின் மீது ஏறுவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

அதிக எடையுள்ள மோட்டார்சைக்கிள் என்றாலும் கூட, அவர் இந்த காரியத்தை பெரிதாக எந்த சிரமமும் இல்லாமல் செய்கிறார். அவர் மோட்டார்சைக்கிளை தலையில் சுமந்து கொண்டு பேருந்தில் ஏறியபோது, மற்றொரு நபர் ஏணியை கெட்டியாக பிடித்து கொண்டார். தற்போது இந்த வீடியோ முகநூல் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் எவரும், மோட்டார்சைக்கிளை தலையில் சுமந்து கொண்டு பேருந்தின் மீது ஏறிய தொழிலாளியின் உடல் வலிமையை புரிந்து கொள்ளலாம். நெட்டிசன்கள் சிலர் அந்த தொழிலாளியை 'நிஜ பாகுபலி' என பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ அவரை 'சக்திமான்' என புகழ்ந்து தள்ளி கொண்டுள்ளனர்.

அதே சமயம் பலருக்கு இந்த வீடியோ மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பதையும் இங்கே நிச்சயமாக குறிப்பட்டாக வேண்டும். தொழிலாளர்கள் பலர் தங்கள் வாழ்க்கைக்காக இப்படி கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என நெட்டிசன்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தொழிலாளர்கள் இரக்கமற்ற வகையில் நடத்தப்படுகின்றனர் என்ற ரீதியிலும் சிலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ வறுமையின் அடையாளம் என்ற கமெண்ட்களையும் சமூக வலை தளங்களில் நம்மால் காண முடிகிறது. பலதரப்பட்ட கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த தொழிலாளி தனது தலையில் சுமந்து கொண்டு பேருந்தின் மீது ஏற்றியது, யமஹா ஒய்இஸட்எஃப்-ஆர்15 வெர்ஷன் 2.0 (Yamaha YZF-R15 Version 2.0) பைக் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள யமஹா ஒய்இஸட்எஃப் ஆர்15 வி3 (Yamaha YZF R15 V3) பைக்கின் எடை 142 கிலோ ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பைக்குகளில் ஒன்று. குறிப்பாக இந்திய இளைஞர்கள் மத்தியில், யமஹா ஒய்இஸட்எஃப் ஆர்15 வி3 பைக்கிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

யமஹா ஒய்இஸட்எஃப் ஆர்15 வி3 பைக்கில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான 155 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 18.6 பிஎஸ் பவரை வழங்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை யமஹா நிறுவனம் வழங்குகிறது.
இந்திய சந்தையில் யமஹா ஒய்இஸட்எஃப் ஆர்15 வி3 மோட்டார்சைக்கிள் தற்போது 1.49 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.51 லட்ச ரூபாய் ஆகும். இவை எக்ஸ் ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. விலை சற்று அதிகம் என்றாலும், இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.