டிக்கெட் போட்டது வந்தே பாரத் ரயிலுக்கு.. டிராவல் பண்ணது குப்பை வண்டி மாதிரியான ரயில்ல! என்ன குளறுபடி ஆனது?

விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதைப் போலவே பலருக்கு 'வந்தே பாரத்' ரயிலில் பயணிக்க வேண்டும் என்கிற ஆசை இந்தியர்கள் மத்தியில் ஏற்பட இருக்கின்றது. ஏனெனில் அந்த அளவிற்கு மிக சிறப்பான மற்றும் ஆடம்பர ரயிலாக அதனை இந்தியன் ரயில்வேஸ் உருவாக்கி இருக்கின்றது.

எனவேதான் ஒரு சிலருக்கு இந்த ரயலில் ஒரு முறையாவது பயணித்துவிட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளது. மிக முக்கியமாக நாம் இதுவரை கண்டிராத மிக சிறந்த ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த ரயிலில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Worst train travel experience

எனவேதான், இதனை இந்தியன் ரயில்வேஸின் மிகப் பெரிய சாதனையாக உலக நாடுகள் பார்க்கின்றன. இந்த ரயிலில் சொகுசு வசதிகளோ மிக அதிகம், அதேவேளையில் பயணிக்கும் நேரமோ மிகக் குறைவு. மேலும், முழுக்க முழுக்க ஏசி கோச்சையும் இது கொண்டிருக்கும். இதுதவிர, இதில் இருக்கும் இருக்கைகள் மிகவும் மிருதுவானதாக இருக்கும்.

இதுமாதிரியான காரணங்களுக்காகவே பலர் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அதிக ஆர்வத்துடனேயே ஓர் நபர் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க டிக்கெட்டைப் போட்டிருக்கின்றார். ஆனால், அவர் பயணித்ததோ குப்பை வண்டி மாதிரியான ரயில் என கூறப்படுகின்றது.

Vande bharat

இதன் விளைவாக அந்த நபர் தன்னுடைய வாழ் நாளின் மிக மோசமான ரயில் பயணம் என அவர் இந்த பயணத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், ஆடம்பரமான வந்தே பாரத் ரயிலில் பயணிக்க வேண்டும் என்கிற தனது கனவு, தரமற்ற சேவைகள் கொண்ட வேறு ரயிலில் முடிந்ததாகவும் அவர் வேதனை தெரிவித்து இருக்கின்றார்.

சித்தார்த் பாண்டே எனும் நபரே இந்த அவல நிலைக்கு ஆளாகியவர் ஆவார். தன்னுடைய ஒட்டுமொத்த அவலங்களையும் அவர் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்திருக்கின்றார். இந்த பதிவை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-ஐ டேக் செய்து அவர் பதிவிட்டிருக்கின்றார்.

"நான் ஒரு முறை வந்தே பாரத் ரயில் பயணிக்க வேண்டும் என நினைத்து அந்த ரயிலுக்கான டிக்கெட்டை புக் செய்தேன். ஆனால், அதே பெயரில் வேறொரு மிக மோசமான வந்தே பாரத் ரயில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனேன். மிகவும் மோசமான கழிவறைகள் மற்றும் சர்வீஸ் அநத் ரயில் வழங்கப்பட்டன. ஆனால், கட்டணமோ வந்த பாரத் ரயிலுக்கு இணையானதாகவே இருந்தது" என தன்னுடைய டுவிட்டர் பதிவில் சித்தார்த் தெரிவித்திருக்கின்றார்.

சித்தார்த்தின் இந்த பதிவு தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாக தொடங்கி இருக்கின்றது. இவருக்கு ஆதரவாக பலர் தங்களின் கருத்துகளையும், இந்தியன் ரயில்வேஸில் சந்தித்த மிக மோசமான அனுபவங்களையும் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். சித்தார்த், தான் பயணித்த ரயில் எண்ணையும் (22439) பகிர்ந்திருக்கின்றார்.

அவர் பகிர்ந்திருக்கும் எண்ணை வைத்து பார்க்கையில் அது புதி தில்லி மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணவா தேவிக்கும் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் என்பது தெரிகின்றது. இந்த ரயில் உட்பக்கம் மிக மோசமாக இருக்கும் என ஏற்கனவே பலர் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

இத்தகைய ரயிலையே வந்தே பாரத் ரயில் என நினைத்து டிக்கெட்டை சித்தார்த் ஏமாந்திருக்கின்றார். பராமரிப்பு குறைவு, பயணிகளின் அலட்சியம் உள்ளிட்ட காரணங்களினாலேயே இந்த ரயில் இந்தியன் ரயில்வேஸின் மிக மோசமான ரயில்களில் ஒன்றாக இருக்கின்றது. இத்தகைய ஓர் ரயிலில் பயணித்தால் நிச்சயம் ரயிலை பயணத்தை வெறுப்பீர்கள் என கூறலாம்.

அந்தளவிற்கு சுகாதாரமற்ற ஓர் ரயிலாகவே அது இருக்கும் என பலர் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். பல நேரங்களில் பராமரிப்பு சிக்கல் காரணமாக இந்த ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் தவிர்க்க வேண்டிய ரயில்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகின்றது.

சித்தார்த் பாண்டே வந்தே பாரத் ரயிலுக்கே டிக்கெட்டைப் போட்டிருக்கின்றார். ஆனால், அப்கிரேஷன் அந்த ரயிலில் டிக்கெட் இல்லாத காரணத்தினால் அவருக்கான பயண டிக்கெட்டை தேஜஸ்க்கு மாற்றி இருக்கின்றது. இதுவே அவர் மிக மோசமான ரயில் பயண அனுபவத்தைப் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சித்தார்த்தின் டுவிட்டர் பதிவிற்கு தற்போது இந்தியன் ரயில்வேஸின் வாடிக்கையாளர் சேவை மையம் பதிலளித்திருக்கின்றது. அவரின் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்கிற வாக்குறுதியையும் அது அளித்திருக்கின்றது. என்ன பதில் அளித்து என்ன ஆக போகிறது. மிக மோசமான அனுபவம் கிடைத்த பின்னர் இதில் எந்த பயனும் இல்லை என்பதே எங்களின் கருத்தாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 20, 2023, 12:30 [IST]
English summary
Man complains via twitter about his worst train travel experience
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+