ஜெயிலர் ரிலீஸ் அன்னிக்கு தான் இப்படியெல்லாம் நடக்கனுமா? வந்தே பாரத் ரயில் உள்ள திடீரென புகைக்கு இதான் காரணம்!

வந்தே பாரத் ரயிலின் டாய்லெட்டிற்குள் ரஜினி ஸ்டைலில் ஒருவர் சிகரெட்டை பத்த வைத்ததால் ரயில் முழுவதும் புகை சூழ்ந்து கொண்டது. இதனால் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டு புகையை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் வந்தே பாரத ரயில்கள் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் அதிகமான சொகுசு வசதி மற்றும் வெளிநாட்டு ரயில்களுக்கு இணையான வசதிகள் இருப்பதால் மக்கள் பலர் இந்த ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர்.

vande bharat smoke

இந்தியா முழுவதும் படிப்படியாக இந்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செகந்திராபாத்திலிருந்து திருப்பதி வழியாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஏறிய பயணி ஒருவர் ரஜினி ஸ்டைலில் சிகரெட்டை பத்த வைத்து தம் அடித்ததால் ரயிலே தீப்பற்றும் அபாய சூழ்நிலையில் சிக்கியது.

திருப்பதியில் இருந்து கிளம்பிய இந்த வந்தே பாரத் ரயில் செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இந்த ரயிலில் செல்ல டிக்கெட் எடுக்காமல் ஆசாமி ஒருவர் ரயிலுக்குள்ளே ஏறி உள்ளார். அவர் டிக்கெட் பரிசோதவரிடம் சிக்க கூடாது என்பதற்காக ரயிலில் உள்ள டாய்லெட் உள்ளே சென்று அடைத்துக் கொண்டார்.

vande bharat smoke

பாத்ரூம் உள்ளே நீண்ட நேரம் இருந்த அவருக்கு திடீரென சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதனால் அவர் தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சிகரெட்டை எடுத்து பத்த வைத்துள்ளார். டாய்லெட் உள்ளே இருந்து கொண்டே சிகரெட்டை ஜாலியாக ரஜினி ஸ்டைலில் பிடித்துள்ளார்.

ஆனால் ரயில்வே சட்டவிதிகளின்படி ரயிலில் பயணிக்கும் போது சிகரெட் பிடிப்பது என்பது தடை செய்யப்பட்ட விஷயமாகும். இப்படியாக ரயில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் சிகரெட் பிடித்தால் அந்த சிகரெட்டில் இருந்து வெளிவரும் புகை அல்லது நெருப்பு ரயிலில் பரவி ரயில் தீ விபத்திற்கு உள்ளாக நேரிடும்.

சாதாரண ரயிலாக இருந்தால் இவர் சிகரெட் பிடிக்கும்போது ஜன்னல் வழியாக அதன் புகை வெளியேறிவிடும். ஆனால் வந்தே பாரத் ரயில் முழுவதும் ஏசி ரயில் என்பதால் இது முழுவதுமாக குளோஸ் செய்யப்பட்ட ஒரு ரயில் பெட்டி என்பதால் இதிலிருந்து புகை வெளியேற வாய்ப்பு இல்லை.

இதனால் இவர் சிகரெட் பிடித்ததும் அந்த புகை ரயிலுக்குள் உள்ள பயணிகள் அமரும் இடத்திற்கு பரவியது. இது மட்டுமல்லாமல் இந்த ரயில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது என்பதால் இதில் பயர் அலாரம் இருக்கும். சிகரெட் புகை பரவியதும் எங்கோ தீப்பிடித்து விட்டது என்பதை உணர்ந்த பயர் அலாரம் உடனடியாக ஒலிக்க துவங்கியது.

மேலும் ரயிலில் உள்ள நீர் தெளிப்பான்கள் எல்லாம் செயல்பட்டு ரயில் முழுவதும் தானாக நீர் தெளிக்க துவங்கியது. இதை கண்ட அச்சம் அடைந்த பயணிகள் அங்கு இங்கும் ஓடினார். எப்படியாவது ரயில்வே கார்டிற்க்கு இது குறித்து தகவல் தெரிவிக்க அங்குள்ள தொலைபேசியில் முயற்சித்தனர்.

ஒரு வழியாக ரயில் ஓட்டுநருக்கு இந்த தகவல் தெரிந்ததும் அவர் மனுபுழு என்ற ரயில் நிலையத்தின் அருகே ரயிலை நிறுத்தினார். ரயில் நிறுத்தியதும் ரயில்வே போலீசார் புகை வந்த ரயில் பெட்டிக்குள் உள்ளே நுழைந்து அங்கே பாத்ரூம் உள்ளே இருந்த சிகரெட் குடித்த ஆசாமியை கைது செய்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து ரயிலில் சூழ்ந்த புகையை வெளியேற்றினர்.

இதற்கிடையில் அந்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் எல்லாம் பத்திரமாக வேறு ரயில் பெட்டிக்கு மாற்றப்பட்டனர். மேலும் புகை உடனடியாக வெளியேற ரயிலின் உள்ளே இருந்து ரயிலின் கண்ணாடி உடைக்கப்பட்டு புகையை வெளியே அனுப்ப முயற்சி நடந்தது. ரயில் டாய்லெட் உள்ளே சிகரெட் பிடித்த ஆசாமியை போலீசார் நெல்லூர் சிறையில் அடைத்தனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயிலில் பயணிக்கும் போது சிகரெட் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பழைய ரயில்களில் இந்த விதிமுறையை மீறி சில சிகரெட் பிடித்து வந்தனர் ஆனால் அந்த ரயில்கள் எல்லாம் ஜன்னல் வைத்தது என்பதால் பெரிய அளவில் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. வந்தே பாரத் ரயில் விமானம் போல முற்றிலும் மூடப்பட்ட ரயிலாக இருக்கிறது. இதனால் இதன் உள்ளே சிகரெட் பிடித்தால் அது ரயிலைக் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 10, 2023, 19:28 [IST]
English summary
Man detained after smoking in vande bharat express restroom triggers fire alarm
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+