அடுத்ததாக பாத்ரூமில் வழுக்கி விழ போகும் நபர்!! போலீசார் வேலையை ஆரம்பிச்சிட்டாங்க... வைரல் வீடியோ!

சாலையில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட்களில் ஈடுப்படுவது நம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, பைக் வீலிங், கார் ட்ரிஃப்ட் போன்றவற்றில் ஈடுப்படுவோரை சமீப காலமாக அதிகமாக பார்க்க முடிகிறது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்ததற்கு பிறகு, இத்தகையவர்களை பற்றி அதிகளவில் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இளைஞர் ஒருவர் ஓடும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மேற்கூரையின் மீது நின்றபடி பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ பலரது கவனத்தை பெற்றிருப்பது மட்டுமின்றி, அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

காலியான சாலையொன்றில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் இளைஞர் ஒருவர் அபாயக்கரமான முறையில், காரின் கதவுகளை திறந்து கொண்டு மேற்கூரையின் மீது அமர்ந்தும், நின்று கொண்டும் பயணம் செய்யும் வீடியோவை உங்களில் நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதில் இன்னும் ஷாக்கிங்கான விஷயம் என்னவென்றால், அந்த சமயத்தில் இந்த நபர் தான் காரை ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார்.

man doing dangerous stunts

அதாவது, ஸ்விஃப்ட் காரை ஓட்டிக் கொண்டு சென்றவர் சாலை காலியாக இருப்பதை பார்த்ததும், டிரைவர் இருக்கைக்கு அருகே இருக்கும் கதவை திறந்து, அதன்மீது கால் வைத்து காரின் மேற்கூரை மீது ஏறி பயணம் செய்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில், காரின் மேற்கூரை மீது அமர்ந்திருந்தவர், மேற்கூரை மீது நின்று பயணம் செய்ய ஆரம்பித்து உள்ளார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அந்த காருக்கு பின்னால் வேறொரு வாகனத்தில் வந்தவர்கள் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர்கள் இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளவரின் நண்பர்களாக இருப்பர் என கூறப்படுகிறது. அதாவது, தவளை தன் வாயால் கெடும் என்பது போல், தன் நண்பர்கள் காட்சிப்படுத்திய இந்த வீடியோவால் இந்த சம்பந்தப்பட்ட இளைஞர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

man doing dangerous stunts

ஆம்... வீடியோவை வைத்து இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளவர்களை அடையாளம் காணும் பணியில் மும்பை போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் நவி மும்பை பகுதியில் நடந்துள்ளது. ஆனால், வீடியோவில் காட்சிதரும் ஸ்விஃப்ட் காரில் ராஜஸ்தான் மாநிலத்தின் நம்பர் பிளேட் உள்ளது. ஆகையால், ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்தவர்கள் இந்த செயலில் ஈடுப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த வீடியோவை இதுவரையில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும், இளைஞரின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கருத்துகள் என சொல்வதை காட்டிலும், தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்றுதான் வருகின்றனர். சம்பந்தப்பட்ட இளைஞரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூட சிலர் கூறியுள்ளதை பார்க்க முடிகிறது.

man doing dangerous stunts

குறிப்பாக, சியா என்பவர் "விரைவில் போலீசாரிடம் இருந்து பார்ட்-2 வீடியோவை எதிர்பார்க்கலாம்" என நகைச்சுவையாக பதிவிட்ட கமெண்ட், வீடியோவிற்கு இணையாக வைரலாகி வருகிறது. சியாவின் கமெண்ட்டிற்கு பதிலளிக்கும் வகையில், நவி மும்பை போலீசாரின் டுவிட்டர் கணக்கை மும்பை போக்குவரத்து போலீசார் டேக் செய்துள்ளனர். இதனால், போலீசாரின் பதில் நடவடிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது சாலைகளில் இவ்வாறு நடந்து கொள்வது தவறு என போலீசாரும், சமூக ஆர்வலர்களும் ஒருபக்கம் கூக்குரலிட்டு வந்தாலும், மறுப்பக்கம் இவ்வாறு நடந்துக் கொள்பவர்கள் புதுசு, புதுசா வந்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆகையால், இத்தகைய செயல்களை தடுக்க வேண்டுமெனில், தண்டனைகளும், அபராதங்களும் கடுமையாகினால் மட்டுமே உண்டு.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 22:59 [IST]
English summary
Man doing dangerous stunts on moving swift car in mumbai viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X