தெலுங்கு பட டைரக்டர் இதை பார்த்தா, அடுத்த படத்துல ஓப்பனிங் சீனே இது தான்! வைரலாகும் வீடியோ!
தெலுங்கு பட ஹீரோ ஸ்டைலில் மிகவும் ஆபத்தான முறையில் காலால் ஒருவர் காரை ஓட்டி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது எப்படி ஒருவர் காலால் காரை ஓட்ட முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எல்லாம் இந்த வீடியோவை பார்த்தால் வரும். அந்த சந்தேகங்கள் எல்லாம் உங்களுக்கு தீரும் வகையில் இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமாக வாகனம் ஓட்டும் நபர்களின் வீடியோ வெளியாகி வைரலாக பரவும் இப்படிப்பட்ட வீடியோ உங்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் பலர் இப்படியான வீடியோக்களை பகிர்வார்கள். சிலர் தங்கள் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காகவே இப்படியான சேட்டைகளை எல்லாம் செய்து வீடியோக்களை எடுத்து வெளியிடுவார்கள்.

இப்படியாக செய்வது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணராமல் பலர் இந்த சேட்டைகளை செய்து வரும் நிலையில் சமீபத்தில் இப்படியாக ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் டிரைவர் ஒருவர் மாருதி ஆல்டோ காரில் பயணிகள் சீட்டில் அமர்ந்து கொண்டு தனது காலால் ஸ்டியரிங்கை பிடித்து காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அது எப்படி காலில் மட்டும் காரை ஓட்ட முடியும்? ஆக்சிலரேட்டர் பிரேக் எல்லாம் பிடித்தால் தானே கார் ஓடும் இது எப்படி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம். இவர் ஓட்டி வருவது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் காரல்ல மாறாக டிரைவிங் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் காராகும். டிரைவிங் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் கார்களில் பக்கத்தில் உள்ள பயணிகள் சீட்டிலும் கிளட்ச், பிரேக், ஆக்ஸிலரேட்டர் கண்ட்ரோல்கள் எல்லாம் இருக்கும்.

டிரைவிங் பயிற்சியின்போது பயிற்சி பெறும் நபர்கள் ஏதாவது தவறு செய்தால் உடனடியாக அதை சரி செய்ய அருகில் உள்ள பயணிகள் சீட்டில் இருக்கும் நபருக்கு இந்த கண்ட்ரோலை எல்லாம் கொடுத்து வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட காரில் தான் ஒருவர் பயணிகள் சீட்டில் அமர்ந்து கொண்டு தனது இடது காலில் ஆக்ஸிலரேட்டரை அழுத்திக்கொண்டு வலது காலை தூக்கி மேலே வைத்து ஸ்டயரிங்கை பிடித்து காரை வேகமாக ஓட்டி வருகிறார்.
இவர் காரை வேகமாக ஓட்டி வருவதை சாலையில் செல்லும் மற்றொரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்து இது எப்படி சாத்தியம் என குழம்பி போய் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இது டிரைவிங் பள்ளியில் உள்ள கார்களின் சாத்தியமான ஒன்றுதான்.

இப்படியாக வாகனம் ஓட்டி சமூக வலைதளங்களில் பகிர்வது என்பது சாலையில் வாகனம் ஓட்டும் மற்றவர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும். இது முற்றிலும் தவறான விஷயமாக கருதப்படுகிறது. மேலும் டிரைவிங் ஸ்கூல் வாகன ஓட்டிகள் இதுபோன்ற செய்திகளை ஈடுபடுவது அவர்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும் வகையில் இருக்கிறது. டிரைவிங் ஸ்கூலில் உள்ள வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது எப்படி என்று தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆனால் அவர்களே இப்படியாக சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி அந்த வீடியோ வெளியாவது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ வைரலாவதால் பலர் இதன் மூலம் ஈர்க்கப்பட்டு இப்படியான முயற்சிகளை செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த செய்தியை படிக்கும் நீங்கள் நிச்சயம் இதை முயற்சி செய்து பார்க்காதீர்கள் இது முற்றிலும் ஆபத்தான விஷயமாகும்.
காரில் வாகனம் ஓட்டும்போது நிச்சயம் சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டக்கூடாது. சாலையில் தான் யாரும் இல்லையே என்ற கவனக்குறைவாக நீங்கள் வாகனம் ஓட்டினால் திடீரென சாலையில் யாரும் வந்தால் உங்களால் வாகனத்தை கண்ட்ரோல் செய்ய முடியாது. இதனால் இது போன்ற செயல்களில் நீங்கள் எப்பொழுதும் ஈடுபட முயற்சி செய்யாதீர்கள். இது உங்களுக்கே பெரும் ஆபத்தாக முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆவது நிச்சயம் இன்றைய இளம் தலைமுறையினரை தவறான பாதைக்கு எடுத்துச் செல்லும். இதனால் இந்த வீடியோவில் உள்ள நபரையும் இந்த வீடியோ எடுத்து பதிவிட்டு பகிர்ந்த நபரையும் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தான் இது போன்ற வீடியோக்கள் வெளியாவது தவிர்க்கப்படும்


Click it and Unblock the Notifications









