மனுஷனுக்கு கஷ்டம் வருவது சகஜம்தான், அதற்காக இப்படியா...!! ஓலா ரைடரின் செயலால் பதறிப்போன மற்ற வாகன ஓட்டிகள்!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருவர் தனது இரண்டுகளையும் விட்டு சாலையில் அசால்ட்டாக ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த வகையில், இந்த வீடியோவை கண்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் இதற்கு என்ன கூறியுள்ளார் என்பதை இனி பார்க்கலாம்.
மனிதன் ஏறி அமர்ந்தாலே, செல்ல வேண்டிய இடத்திற்கு தானாக கொண்டுச் செல்லும் வாகனங்கள் எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்பது உறுதி. ஆனால், இப்போதே சில வாகனங்கள் அவ்வாறுதான் இயங்குகின்றன. அவ்வாறான சில ஆட்டோமொபைல் வாகனங்களை செல்ஃப்-பேலன்ஸ் உடன் தானாக இயங்க வைக்கும் அளவிற்கு மாற்றக்கூடியதில் முக்கிய பங்கு வகிப்பது க்ரூஸ் கண்ட்ரோல் எனலாம்.

க்ரூஸ் கண்ட்ரோல் தொழிற்நுட்பத்தை கொண்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருவர் தனது இரண்டு கைகளையும் விட்டு அசால்ட்டாக ஓட்டி பிரம்மிக்க வைத்துள்ளார். அதேநேரம், அபாயகரமானதாகவும் இருந்த இந்த நிகழ்வை, அருகில் காரில் சென்ற ஒருவர் தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவில், ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் அந்த நபர் ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் கை வைத்திருக்கவில்லை, இதனால் ஸ்கூட்டருக்கு ஆக்ஸலரேஷனும் கொடுக்கவில்லை. இருப்பினும் எவ்வாறு ஸ்கூட்டர் இயங்கியது? என உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம். ஆனால், வீடியோவை நீங்கள் சற்று உற்று பார்த்தீர்கள் என்றால், பாலம் ஒன்றின் சரிவில் ஸ்கூட்டர் சென்றுக் கொண்டிருந்த போது இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதை அறியலாம்.

27 வினாடிகள் ஓடக்கூடியதாக இருக்கும் இந்த வீடியோ முழுக்க அந்த நபர் ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் கை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிவிட்டரில் இந்த வீடியோவை கண்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால், "இதை பார்த்த பிறகு க்ரூஸ் கண்ட்ரோலுக்கு மாதந்திர கட்டணம் வசூலிக்கலாமா என நினைக்கிறேன்" என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
பாவிஷ் அக்ர்வாலின் இந்த டுவிட்டர் பதிவை இதுவரையில் மட்டும் சுமார் 3 இலட்ச பேர் பார்த்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரீ-போஸ்ட் செய்துள்ளனர். பாவிஷ் அகர்வாலை போலவே, நெட்டிசன் ஒருவரும் இந்த வீடியோவிற்கு தனது கமெண்ட்டை மிகவும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அதாவது, "ஸ்கூட்டரை ரிமோட்டில் ஆப்ரேட் செய்வது போல் உள்ளது.

அந்த ரிமோட் இந்த நபரது மனைவியிடம் உள்ளது" என கமெண்ட் செய்துள்ளார். நிறைய பேர் இந்த வீடியோவிற்கு, "ஆட்டோ பைலட் மோட்" என கமெண்ட் செய்துள்ளனர். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போதைக்கு எஸ்1 என்கிற ஒரேயொரு மாடலில் மட்டும்தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஏர் வேரியண்ட்டில் இருந்து புரோ வேரியண்ட் வரையில் பல விதமான வேரியண்ட்களில் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது.
இவை அனைத்திலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை வழங்குகிறது. இந்த தொழிற்நுட்ப வசதியை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 20kmph வேகத்தில் இருந்து 80kmph வேகத்திற்கு மத்தியில் இயங்கும்போது ஆக்டிவேட் செய்துக் கொள்லலாம். க்ரூஸ் கண்ட்ரோலை ஓலா ஸ்கூட்டர்களில் ஹேண்டில்பாரின் வலது பக்கத்தில் மேலே வழங்கப்படும் பொத்தானை நன்கு நீளமாக அழுத்துவதன் மூலம் ஆக்டிவேட் செய்யலாம். க்ரூஸ் கண்ட்ரோல் குறியீடும் அங்கு இடம்பெற்றிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய கால மாடர்ன் வாகனங்களில் க்ரூஸ் கண்ட்ரோல் ஓர் தவிர்க்க முடியாத தொழிற்நுட்பமாக மாறி வருகிறது. ஓலா எஸ்1 போன்ற மாடர்ன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரையில் இது வழங்கப்படுகிறது எனும்போது, க்ரூஸ் கண்ட்ரோல் எந்த அளவிற்கு பிரபலமாகி உள்ளது என்பதை அறியுங்கள். இதனால், வரும் காலங்களில் க்ரூஸ் கண்ட்ரோல் மேலும் பரிணாம வளர்ச்சியை அடையும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









