கடைக்குள்ளேயே காரில் வந்து பொருட்கள் வாங்கிச் சென்ற மனிதர்: இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!

Written By:

சீனாவில் உள்ள ஸென்ஜியாங் மாகாணத்தில் நடந்த வினோத சம்பவம் ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

கடைக்கு உள்ளேயே காரை ஓட்டிச் சென்ற விசித்திர நபர்..!!

அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்க காரில் வந்த நபர், கடைக்கு வெளியே தன்னுடைய காரை பார்க்கிங் செய்யாமல் நேராக கடைக்குள்ளேயே ஓட்டிச் சென்று நிறுத்தியுள்ளார்.

கடைக்கு உள்ளேயே காரை ஓட்டிச் சென்ற விசித்திர நபர்..!!

டெய்லி சீனா என்ற ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியில் அந்த நபர் கடைக்குள் ஒரு முதலாளியைப் போல காரை ஓட்டி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடைக்கு உள்ளேயே காரை ஓட்டிச் சென்ற விசித்திர நபர்..!!

காரை கடைக்குள்ளேயே ஓட்டிச் சென்றவர், காரைவிட்டு கீழே கூட இறங்கவில்லை. இதில் ஆச்சரியம் அளிக்கத்தக்க வகையில் அந்த கடையின் ஊழியர் அந்த நபரை வெளியே போகச் சொல்லாமல் ஓடோடிச் சென்று அவருக்கு தேவையான பொருட்களை கொடுத்துள்ளார்.

கடைக்கு உள்ளேயே காரை ஓட்டிச் சென்ற விசித்திர நபர்..!!

கடையில் முதலாளி கூட பார்க்கிங்கில் தான் காரை நிறுத்தியிருப்பார், எனினும் காரில் வந்த நபர் நேராக கடைக்குள்ளேயே காரில் சென்று பொருட்கள் வாங்கியுள்ள சம்பவமும், அந்த கடையின் ஊழியர் இதை சாதாரணமாக கருதி நடந்துகொண்ட விதமும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வைரலாகி வரும் இந்த சிசிடிவி காட்சிகளை மேலே உள்ள ஸ்லைடரில் காணலாம்.

English summary
Read in Tamil about Man who drove his car inside super market to get groceries. viral video
Story first published: Friday, June 16, 2017, 12:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark