இதலாம் ஜப்பான்காரன் பாத்தா என்ன நெனைப்பான்! இந்த மாதிரி ஒரு விஷயத்துக்காக மாட்ன மொத ஆள் இவர்தான்! மானமே போச்சு

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில் மெட்ரோ ரயிலுக்குள் பயணி ஒருவர் கோபி மஞ்சூரியன் (Gobi Manchurian) சாப்பிட்டு கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது பெங்களூர் மெட்ரோ (Bangalore Metro) ரயில் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bangalore Metro Rail Corporation Limited - BMRCL) விதிமுறைகளின்படி, மெட்ரோ ரயிலின் பெட்டிகளுக்கு உள்ளே சாப்பிடுவது சட்ட விரோதம் ஆகும். மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கு உள்ளே சாப்பிடுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீடியோவில் நாம் பார்க்கும் பயணி இந்த விதிமுறையை மீறியுள்ளார்.

Man Eating Gobi Manchurian Inside Bangalore Metro

எனவே பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. மெட்ரோ ரயிலின் பெட்டிகளுக்கு உள்ளே அமர்ந்து கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட பயணியின் பெயர் சுனில் குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான நகை கடையில் அவர் வேலை செய்து வருகிறார்.

மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள சம்பகி ரோடு (Sampige Road) ஸ்டேஷனில் ஏறிய சுனில் குமார், ஜெயநகர் ஸ்டேஷனில் இறங்கியுள்ளார். வழியில்தான் அவர் கோபி மஞ்சூரியன் சாப்பிட்டு சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். விதிமுறையை மீறியதற்காக பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் சுனில் குமாருக்கு 500 ரூபாய் அபராதம் (Fine) விதித்துள்ளது.

பெங்களூர் மெட்ரோ ரயில் பெட்டிக்கு உள்ளே அமர்ந்து சாப்பிட்டதற்காக, பயணி ஒருவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அபராதம் விதிக்கப்பட்டதுடன் மட்டுமல்லாது, ஜெயநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டு சுனில் குமாருக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக பெங்களூர் பெரு நகரத்தின் போக்குவரத்து நெரிசல் பிரச்னை உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. எனவே பெங்களூர் நகரில் மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

தற்போதைய நிலையில் பெங்களூர் மெட்ரோ ரயில்களில் தினமும் சுமார் 6 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இவ்வளவு அதிகமான பயணிகளை வெற்றிகரமாக கையாள வேண்டும் என்பதற்காகவும், யாருக்கும் அசௌகரியங்கள் ஏற்பட கூடாது என்பதற்காகவும்தான் விதிமுறைகள் வகுக்குக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.

பெங்களூர் மெட்ரோ ரயில்களில் சாப்பிடுவதுடன் மட்டுமல்லாது, மது அருந்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் யாரும் புகைபிடிக்கவும் கூடாது. மேலும் செல்போன் போன்ற டிவைஸ்கள் மூலம் மெட்ரோ ரயில்களில் சத்தமாக பாடல்களை கேட்பதும் கூட தவறுதான். இவை எல்லாம் மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

எனவே எக்காரணம் கொண்டும் இந்த விதிமுறைகளை மீற வேண்டாம். இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை அனைவரும் மனதில் வைத்து கொள்வது நன்மை பயக்கும். இதற்கிடையே பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது பல்வேறு புதிய வழித்தடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆயத்தமாகி வருகிறது.

இந்த புதிய வழித்தடங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, பெங்களூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஓரளவிற்கு குறையும் என கருதப்படுகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு மத்தியில் தற்போது கார்கள் (Cars) மற்றும் டூவீலர்களில் (Two Wheelers) பயணம் செய்து கொண்டுள்ள பலர், இந்த புதிய வழித்தடங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 7, 2023, 17:08 [IST]
English summary
Man fined rs 500 for eating gobi manchurian inside bangalore metro viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+