புது கார் வாங்கிய சந்தோஷத்தில் பணக்காரர் செய்த காரியம்! ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறைய வெச்சுட்டாரு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா தார் (Mahindra Thar). ஆரம்பத்தில் 3 டோர் வெர்ஷனில் மட்டுமே மஹிந்திரா தார் கிடைத்து கொண்டிருந்தது. இதை தொடர்ந்து மஹிந்திரா தார் காரின் 5 டோர் வெர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) என்னும் பெயரில், 5 டோர் வெர்ஷன் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 1 மணி நேரத்திலேயே 1.76 லட்சம் பேர், மஹிந்திரா தார் ராக்ஸ் காரை முன்பதிவு செய்து விட்டனர். இந்த காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு பெரிய வரவேற்பை வழங்கி வருகின்றனர்? என்பதை இதன் மூலமாகவே நாம் புரிந்து கொள்ள முடியும்.

மஹிந்திரா தார் ராக்ஸ் காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் 4×4 ஆப்ஷனும் கூட இருக்கிறது.
இது ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கான கார் என்றாலும் கூட, லெவல் 2 அடாஸ், முன் பக்க பயணிகளுக்கான இருக்கையில் வென்டிலேஷன், மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் என ஏகப்பட்ட வசதிகளை, மஹிந்திரா நிறுவனம் வாரி வழங்கியுள்ளது.

இருப்பினும் 12.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே மஹிந்திரா தார் ராக்ஸ் காரை வாங்கி விட முடியும். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 22.49 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுக்க தற்போது மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் டெலிவரி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த கம்பீரமான காரை டெலிவரி எடுக்கும்போது ஒரு சிலர் வித்தியாசமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ஒரு சிலர் ஒட்டகத்தில் வந்து மஹிந்திரா தார் ராக்ஸ் காரை டெலிவரி எடுத்து சென்றதை இதற்கு உதாரணமாக கூற முடியும்.
இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், மஹிந்திரா தார் ராக்ஸ் காரை டெலிவரி எடுத்த சந்தோஷத்தில், ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.
இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் சன்ரூஃப் வழியாக 2 பேர் வெளியே நின்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் ஒருவரின் கையில் துப்பாக்கி இருக்கிறது. இது பொம்மை துப்பாக்கி எல்லாம் இல்லை. உண்மையான துப்பாக்கி.
மஹிந்திரா தார் ராக்ஸ் கார் கைகளுக்கு கிடைத்த சந்தோஷத்தில் அவர் வானத்தை நோக்கி ஒரு சில முறை சுடுவதை நம்மால் காண முடிகிறது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் வீடியோவை காணும் நெட்டிசன்கள், சமூக வலை தளங்களின் மூலமாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற கொண்டாட்டங்களை ஆதரிக்க கூடாது என நாங்கள் கருதுகிறோம். சம்பந்தப்பட்ட நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது கார் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருவேளை டிரைவர் எதிர்பாராத விதமாக பிரேக் பிடித்திருந்தால், துப்பாக்கியின் திசை மாறியிருக்க கூடும். இது பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் இது மிகவும் ஆபத்தான ஒரு செயல்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எனவே புதிய கார்களை டெலிவரி எடுக்கும்போது இது போன்ற கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








