கண்றாவியா இருக்கு! பெண்கள் முன்னாடி இளைஞர் செய்த காரியம்! ஒரு நிமிஷம் எல்லாரும் ஆடி போயிட்டாங்க!
சமூக வலை தளங்களில் தற்போது ப்ராங்க் வீடியோக்களுக்கு (Prank Videos) நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எனவே வேடிக்கையான ப்ராங்க் வீடியோக்களை உருவாக்குகிறேன் என்ற பெயரில் பொது இடங்களில் நிறைய பேர் எல்லை மீறி நடந்து கொள்கின்றனர். இது பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
எனவே பொது இடங்களில் மற்றவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் ப்ராங்க் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பெங்களூர் மெட்ரோ (Bangalore Metro) ரயிலில் ப்ராங்க் செய்து, பயணிகளை எல்லாம் பதற்றத்தில் ஆழ்த்திய இளைஞர் ஒருவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞர் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலைய எஸ்கலேட்டரிலும், மெட்ரோ ரயிலுக்கு உள்ளேயும் ப்ராங்க் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அத்துடன் அதனை இன்ஸ்டாகிராம் தளத்திலும் வெளியிட்டுள்ளார். எனவே அந்த இளைஞர் மீது காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.
அந்த இளைஞரின் பெயர் ப்ரஜ்வால் என்பதாகும். இவர் எஸ்கலேட்டரில் ஏறும்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதை போல் நடித்துள்ளார். பின்னால் வந்து கொண்டிருந்த வயது முதிர்ந்த பெண் ஒருவர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார். இதே விஷயத்தை மெட்ரோ ரயிலுக்கு உள்ளேயும், ப்ரஜ்வால் செய்துள்ளார்.

இதை பார்த்து அங்கேயும் ஒரு சில பெண்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். இந்த வீடியோ வெளியானதையடுத்து, ப்ரஜ்வால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள், காவல் துறையிடம் புகார் அளித்ததையடுத்து, ப்ரஜ்வால் மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ''ப்ரஜ்வாலின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. அது விதிமுறைகளுக்கு எதிரானது. அவரது நடவடிக்கையால் பயணிகள் பலர் பதற்றமடைந்துள்ளனர். எனவே ப்ரஜ்வால் மீது காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார்.
ப்ரஜ்வால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் மட்டுமல்லாது, அவருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளையடுத்து, இனிமேல் இது போன்ற விஷயங்களை செய்ய மாட்டேன் என காவல் நிலையத்தில், ப்ரஜ்வால் உறுதி அளித்துள்ளார். ஆனால் சமீப காலமாக பெங்களூர் மெட்ரோ ரயில்களில் விதிமீறல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வைரல் வீடியோவில் (Viral Video), பெங்களூர் மெட்ரோ ரயிலுக்கு உள்ளே, பயணி ஒருவர் சாப்பிட்டு கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. விதிமுறைகளின்படி மெட்ரோ ரயிலுக்கு உள்ளே சாப்பிட கூடாது. ஆனால் அதை மீறி உணவு சாப்பிட்டதால், அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெரு நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) பிரச்னை அதிகம் இருப்பதால், கார் (Car) மற்றும் பைக் (Bike) போன்ற வாகனங்களில் பயணம் செய்வதை காட்டிலும், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
குறிப்பாக மெட்ரோ ரயில்கள் மிக வேகமாக செல்வதாலும், பாதுகாப்பாக இருப்பதாலும் மக்கள் அவற்றில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உண்மையில் சாலை மார்க்கமாக வாகனங்களில் பயணம் செய்வதை காட்டிலும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தால், செல்ல வேண்டிய இடத்தை வேகமாக அடைந்து விடலாம். அத்துடன் இது பாதுகாப்பானதும் கூட.
எனவேதான் மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பேர் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு பிரச்னைகளையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில், விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








