காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

சில வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றாததினால் அவர்களுக்கு போக்குவரத்து போலீஸார் தடை விதிப்பதை இதற்கு முன் பலமுறை நமது செய்திதளத்தில் பார்த்திருக்கிறோம். இதில் பெரும்பான்மையான சம்பவங்கள் ஹெல்மெட் அணியாதவையாக தான் இருந்திருக்கின்றன.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

இதில் சிலவற்றில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிக்கு போலீஸார் வலுக்கட்டாயமாக அபராத செல்லனை தந்துள்ளனர். அத்தகைய ஒரு சம்பவம் தான் உத்திர பிரதேசம், கான்பூரில் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த வீடியோவினை கீழே காணலாம்.

சாலையில் ஒருவர் வாகனம் ஓட்டி வருகிறார், அவருக்கு போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இதில் என்ன ஆச்சிரியம் இருக்கிறது என நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் எந்த வாகனத்தில் வந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும் அல்லவா. இங்கு கான்பூரில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் நபர் வந்ததோ நான்கு சக்கர, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில்.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

நாம் யாரும் காரில் ஹெல்மெட் அணிந்து செல்வது இல்லை. அதேபோல் இந்த நபரும் பயணித்து வந்துள்ளார். ஆனால் இவருக்கு போக்குவரத்து போலீஸார் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்த குற்றத்திற்காக வலுக்கட்டாயமாக அபராதம் விதித்ததாக செல்லானை இந்த வீடியோவில் காண்பிக்கிறார்.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

ஹெல்மெட், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கே பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கே கட்டாயமாக தேவை என்கிறது அரசாங்கம். கார் ஓட்டுனர்களுக்கு அல்ல. கார்களில் பயணிப்பவர்களுக்கு இருக்கை பெல்ட்டே அவசியமானதாக விளங்குகிறது. அதை கூட நாம் இந்த செய்தியில் பார்க்கும் நபர் அணிந்திருந்ததாக கூறுகிறார்.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

உண்மையில் எதற்காக இவருக்கு இப்படி வலுக்கட்டாயமாக அபராதம் விதிக்கப்பட்டது? என்ற கேள்விக்கான பதில் எங்களுக்கும் தெரியவில்லை. போக்குவரத்து போலீஸாருடன் தனிப்பட்ட பகை வைத்திருந்தால் இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. இந்த அபாரதத்திற்கு தான் மிகவும் அதிர்ச்சியளித்ததாக இந்த கார் டிரைவர் தெரிவித்துள்ளார்.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

இங்கே இந்த வழக்கில் கார் டிரைவர் எந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. ஏனெனில் சட்ட புத்தகத்தில் காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராத விதிக்க எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பொதுவாக காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததற்கும், மற்ற பதிவு சான்றிதழ், மாசு உமிழ்வு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் முறையாக வைத்தில்லாததற்கும் தான் அபராதம் விதிப்பர்.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

ஆனால் கான்பூரில் ஒரு போலீஸ்காரர் விதித்துள்ளார் என்பது உண்மையென்றால், அந்த போலீஸ்காரர் முட்டாளாக இருக்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக போலீஸார் குறிப்பிட்ட ஒருவரை மட்டும் செய்வது நம் நாட்டில் சில இடங்களில் அவ்வப்போது நடைபெறக்கூடியவை தான்.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

ஒருசமயத்தில் மாதத்திற்கு ஒரு மலையாள படம் இந்த கான்செப்ட்டில் தான் வெளிவந்தது. தேவையான அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்திருந்தாலும் எங்களை மட்டும் டார்க்கெட் செய்து சில பகுதிகளில் போலீஸார் தொந்ததரவு செய்கின்றனர் என்று பல சூப்பர் பைக் ஓட்டுபவர்கள் வீடியோக்களில் கூறி கேட்டிருக்கிறோம்.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

சூப்பர் பைக் உரிமையாளர்கள் கூறுவதுபோல் சில குறிப்பிட்ட பகுதிகளில் போலீஸார் சாலையில் வாகனங்களை மடக்கி அபராதம் விதிப்பதை அடிக்கடி பார்த்த நியாபகம் எனக்கும் உள்ளது. இந்த கான்பூர் மனிதருக்கு எங்களுக்கு தெரிந்தவரையில், அபராதம் விதிக்கும் போது தவறான உள்ளீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

இவ்வாறான கவனக்குறைவுகளே இதுபோன்ற வைரல் வீடியோக்களை உருவாக்கின்றன. செல்லானில் அபராதத்திற்கு தவறான காரணம் உள்ளீடு செய்யப்பட்டிருப்பதை பார்த்த கார் ஓட்டுனர் அதனை வைரலாக்க கூட இவ்வாறு செய்திருக்கலாம். ஏனெனில் இதுபோன்று சமீபத்தில் கூட, ஹெல்மெட் அணியாததற்கான அபராத செல்லான் கார் ஓட்டுனருக்கு வழங்கப்பட்டு இருந்தது.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

ஆனால் அதன் பின்னரே அந்த காரின் பதிவெண்ணுடன் பொருந்தும் போலி பதிவெண்ணை கொண்ட ஸ்கூட்டர் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. அதாவது ஒருவர் செய்யும் தவறுக்கு சம்பந்தமே இல்லாத வேறொருவர் தண்டனை அனுபவிக்கும் சூழல் ஏற்படுகிறது.

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதமா!! உத்திர பிரதேசத்தில் நடந்துள்ள செம்ம கூத்து!

கடந்த காலங்களில், கார் ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணியாததற்காக தவறாக அபராதம் விதிக்கப்பட்ட பல வழக்குகள் உள்ளன. ஒரு சில சந்தர்ப்பங்களில், ஹெல்மெட் அணியாததற்காக கார் டிரைவருக்கு போலீஸார் அந்த இடத்திலேயே, சாலையிலேயே அபராதம் கூட விதித்துள்ளனர். ஆனால் அப்போது இணையம் இந்த அளவிற்கு நம் வாழ்வில் ஓர் அங்கமாக இல்லாததினால் வெளியில் தெரியவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Man begins wearing helmet after getting fined for driving Maruti Dzire without helmet.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X