திடீரென சூப்பர் ஹீரோவாக உருவெடுத்த சாமானியர்: சமூகவலைத்தளங்களில் குவியும் பாராட்டு..!!

Written By:

திரைப்படங்களில் வருவதைப் போன்று சூப்பர் ஹீரோக்கள் நிஜத்தில் இல்லை. அவர்கள் நம்முடனே வாழ்ந்து வருகின்றனர். ஆபத்துக்காலங்களில் கைகொடுக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஹீரோக்களே.

போக்குவரத்து சிக்னலில் திடீரென உருவான சூப்பர் ஹீரோ..!!

அந்த வகையில் ஒருவர் ஆபத்தில் இருக்கிறார் என்று அறிந்தவுடன், சற்றும் தாமதிக்காமல் சமயோசிதமாக செயல்பட்டு ஆபத்பாந்தவனாக களத்தில் இறங்கி நிஜத்தில் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் ஒருவர்.

போக்குவரத்து சிக்னலில் திடீரென உருவான சூப்பர் ஹீரோ..!!

அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகானத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் ஒன்றில் கார் ஒன்று தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது.

போக்குவரத்து சிக்னலில் திடீரென உருவான சூப்பர் ஹீரோ..!!

மிதமான வேகத்தில் நிண்றுகொண்டிருந்த கார்கள் மீது உரசியவாறே முட்டிச் சென்று கொண்டிருந்தது அந்த நீல நிற கார்.

போக்குவரத்து சிக்னலில் திடீரென உருவான சூப்பர் ஹீரோ..!!

நிலை தடுமாறி வந்துகொண்டிருந்த கார், தன் கார் மீது மோதாமல் தவிர்க்க பின்னோக்கி தனது காரை எடுத்துச் சென்றார் இல்லினாய்ஸை சேர்ந்த டிக்ஸன் என்பவர்.

போக்குவரத்து சிக்னலில் திடீரென உருவான சூப்பர் ஹீரோ..!!

காரை வேகமாக ரிவர்ஸ் எடுக்கும் போது தான் அந்த காரின் ஓட்டுநருக்கு எதோ நேர்ந்திருக்கிறது என்றும் அவருக்கு மருத்துவ ரீதியாக உதவி தேவைப்படுவது இவருக்கு தெரியவந்தது.

போக்குவரத்து சிக்னலில் திடீரென உருவான சூப்பர் ஹீரோ..!!

டிக்ஸன் சற்றும் தாமதிக்காமல் சாலையோரம் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு, ஓடிக்கொண்டிருந்த அந்தக் காரின் மீது எறி குதித்து அதன் ஜன்னல் வழியாக நுழைந்து காரை நிறுத்தியுள்ளார்.

போக்குவரத்து சிக்னலில் திடீரென உருவான சூப்பர் ஹீரோ..!!

பின்னர் தான் அந்த காரின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் டிக்ஸன்.

போக்குவரத்து சிக்னலில் திடீரென உருவான சூப்பர் ஹீரோ..!!

டிக்ஸனின் இந்த திடீர் சாகசத்தால் அந்த ஓட்டுநரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒரு வேளை டிக்ஸன் மட்டும் அவரை காப்பாற்றாமல் விட்டுவிட்டு தனக்கென்ன என சென்றிருந்தால் அந்த ஓட்டுநருக்கு விபரீதமாக ஏதேனும் நேர்ந்திருக்கலாம்.

டிக்ஸனின் இந்த முயற்சியை குறிப்பிட்டு உள்ளூர் காவல்துறையினர் டிவிட்டரில் பாராட்டியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிக்ஸனை சூப்பர் ஹீரோ என வர்ணித்து பலரும் பாராட்டி வருகின்றனர். சூப்பர் ஹீரோ என்பவர்கள் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். ஆபத்துக்காலங்களில் கைகொடுக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஹீரோக்களே என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

டிக்ஸனின் சாகசத்தை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..

English summary
Read in Tamil about man rescues driver doing a dive into the window of the running car.
Story first published: Wednesday, June 7, 2017, 11:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark