டிராஃபிக் ஜாமில் இருந்து தப்பிக்க பாகுபலியாக மாறிய இளைஞர்! வீடியோவை முழுசா பாத்ததும் இந்தியாவே ஆடி போயிருச்சு!

இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. ஒரு பக்கம் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் மறுபக்கம் அதற்கு ஏற்ற வகையில், சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவது இல்லை. இதுவே இந்திய சாலைகளில் வாகனங்கள் நிரம்பி வழிவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

குறிப்பாக சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற பெருநகரங்களில் நிலைமை மிகவும் மோசம். இதில், இந்தியாவின் ஐடி தலைநகரம் என வர்ணிக்கப்படும் பெங்களூரில், ஒரு சில சமயங்களில், வெறும் 10 கிலோ மீட்டர் தொலைவை கடக்கவே 2-3 மணி நேரம் வரை ஆகி விடும்.

Man Lifts Two wheeler Over Head To Beat Traffic Jam

அதுவும் பெங்களூரில் மழை பெய்து விட்டால், போக்குவரத்து நெரிசல் பிரச்னையை சமாளிப்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாக மாறி விடுகிறது. அதேதான் தற்போது டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் (Delhi National Capital Region) நடந்து வருகிறது. டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்பட்டு கொண்டுள்ளது. எனவே டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் மிக கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஹரியானா மாநிலம் குருகிராம் (Gurugram) நகரமும், டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ்தான் வருகிறது.

Traffic Jam

அங்கு கனமழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக ஸ்கூட்டர் உரிமையாளர் ஒருவர் செய்த காரியம், தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Gurgaon Locals என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவிய ஒரு சாலையில் இளைஞர் ஒருவர், தனது ஸ்கூட்டரை, தலைக்கு மேலே தூக்கி கொண்டு செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அவருக்கு மற்றொரு இளைஞர் உதவி செய்கிறார்.

போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காகவே அவர்கள் ஸ்கூட்டரை தலைக்கு மேலே தூக்கி சென்றுள்ளனர். சமூக வலை தளங்களில் இந்த வைரல் வீடியோவிற்கு தற்போது பலவிதமான கமெண்ட்கள் வந்து கொண்டுள்ளன. ஒரு நெட்டிசன், ''புதிய பாகுபலி வந்து விட்டார்'' என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு நெட்டிசனோ, ''போக்குவரத்து நெரிசல் பிரச்னை இருக்கும் சாலைகளில், ஒரு இடத்தில் இருந்து பைக்கை தூக்கி மற்றொரு இடத்தில் விடும் வகையிலான ஒரு புதிய தொழிலை ஆரம்பிக்கலாம்'' என வேடிக்கையாக கூறியுள்ளார். இப்படி இந்த வைரல் வீடியோவிற்கு தற்போது வேடிக்கையான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

ஆனால் ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும், உண்மையில் இது ஒரு தீவிரமான பிரச்னை ஆகும். சில சமயங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட இந்திய சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கி கொள்ள வேண்டியதாகி விடுகிறது. எனவே இந்தியா முழுக்க போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாலைகளை உடனடியாக விரிவாக்கம் செய்வதுதான், போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க உதவி செய்யும் முதன்மையான வழி ஆகும். அத்துடன் சொந்த வாகனங்களை தவிர்த்து விட்டு, பஸ் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அரசு ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவின் பெரு நகரங்களில் 7 பேர் போக கூடிய ஒரு பெரிய காரில், ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்கிறார். இப்படி தனியாக பயணம் செய்வதற்கு நிறைய பேர் காரை தேர்வு செய்வதாலும் கூட, போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படுகிறது. அவர்கள் எல்லாம் பஸ் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு மாறினால், சாலைகளில் நெரிசல் குறையும் என்பது உறுதி.

எனவே பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதன் அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் அரசு தீவிரமாக ஏற்படுத்த வேண்டும். அத்துடன் அரசு நடவடிக்கை எடுக்கட்டும் என்று காத்திருக்காமல், பொதுமக்களும் தங்கள் சமூக பொறுப்பை உணர்ந்து, பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய முன் வருவது அவசியம்.

இந்தியாவில் தற்போது கார்கள் மற்றும் பைக்குகள் மீதான ஜிஎஸ்டி (GST) வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்கள் மற்றும் பைக்குகளின் விலை வெகுவாக குறையவுள்ளது. வரும் மாதங்களில் கார்கள் மற்றும் பைக்குகளின் விற்பனை கிடுகிடுவென உயர்வதற்கு இது வழிவகுக்கும். ஜிஎஸ்டி வரியை குறைத்திருக்கும் அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றாலும் கூட, இது போக்குவரத்து நெரிசல் பிரச்னையை மேலும் அதிகமாக்கி விடும் என்பது ஒரு பக்கம் கவலையளிக்க கூடிய விஷயமாக உள்ளது.

எனவே சொந்தமாக வாகனம் இருந்தாலும், தேவையில்லாத சமயங்களில் அவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக முடிந்த வரை பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யலாம். தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும், சொந்த வாகனங்களை பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டு கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 4, 2025, 17:17 [IST]
English summary
Man lifts two wheeler over head to beat traffic jam viral video all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+