வந்தேபாரத் ரயிலில் சிறுநீர் கழிக்க சென்றவருக்கு ரூ 6 ஆயிரம் நஷ்டம்! என்ன நடந்தது தெரியுமா?
பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழிக்க சென்றவருக்கு ரூ 6000 இழப்பு ஏற்பட்டுள்ளது. நின்று கொண்டிருந்த ரயிலில் சிறுநீர் கழிக்க சென்றவருக்கு எப்படி ரூ 6000 இழப்பு ஏற்பட்டது? இதனால் என்ன பிரச்சனை? விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் பிரபலமாக இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலில் அதிக வசதிகள் இருப்பதால் மக்கள் அந்த ரயில் பயணிக்க அதிகமாக விரும்புகின்றனர்.

வந்தே பாரத் ரயில் என்பது நவீன வசதிகளும் கூடியது. இது மற்ற சாதாரண ரயில்கள் போல இல்லை. முக்கியமாக ரயிலில் தானியங்கி கதவுகள் இருக்கிறது இந்த ரயில் வேகமாக செல்வதால் தானியங்கி கதவுகள் முக்கிய தேவையாக இருக்கிறது. மெட்ரோ ரயிலை போல இந்த ரயிலிலும் தானியங்கி கதவுகள் செயல்படுகிறது.
இது மட்டுமல்ல இந்த ரயிலில் முன்பக்கமும் பின்பக்கமும் பெட்டிகளுடனே சேர்ந்து இன்ஜினும் இருக்கிறது. இன்ஜினை தனியாக கழட்டும் ஆப்ஷன் இந்த ரயிலில் கிடையாது. என்னதான் மக்கள் வந்தே பாரத் ரயிலை அதிகம் பயன்படுத்தினாலும் அதில் ஒரு சிக்கல் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அது இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கதவுகள் தான்.

பல ரயில் பிளாட்பாரத்தில் நிற்கும் போது ரயிலுக்குள்ளே சென்று பார்க்கும் ஆர்வத்தில் டிக்கெட் இல்லாமலேயே ரயிலுக்குள் சென்று ரயில் கிளம்புவதற்கு முன்பாக கதவுகள் மூடப்பட்டு ரயில் உள்ளே சிக்கி விடுகின்றனர். ரயிலுக்குள் பயணிக்கும் பயணிகள் சிலர் ரயில் பிளாட்பாரத்தில் நிறுத்தப்படும் போது வெளியே காற்று வாங்க வருவதாக நினைத்து ரயில் கிளம்பு முன் கதவுகள் அடைக்கப்பட்டு ஏற முடியாமல் தவிக்கின்றனர்.
இப்படியாக சமீபத்தில் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்ற வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழிக்க சென்றதால் ரூ 6000 இழந்துள்ளார். இந்த செய்தி தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வந்தே பாரத் ரயிலில் ஏறும் போதும் சரி, நடுவில் இறங்கும் போது சரி சற்று கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட சம்பவம் ஹைதராபாத்தைச் சேர்ந்த வியாபாரி அப்துல் காதிர் என்பவருக்கு நடந்துள்ளது. இவர் உலர் பழங்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் தனது தொழில் ரீதியாக மத்திய பிரதேச மாநிலம் சீரோலிக்கு செல்ல வேண்டும். இவர் தனது மனைவி மற்றும் 8 வயது மகனுடன் செல்ல தனது பயணத்தை திட்டமிட்டுள்ளார்.
இந்த பயணத்திற்காக ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் இவர் போபாலுக்கு வந்துள்ளார். போபாலில் வேறொரு ரயிலுக்காக இவர் காத்திருக்கும் போது இவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் பார்த்து இவர் செல்ல காத்திருந்த பிளாட்பாரத்திற்க்கு பக்கத்து பிளாட்பார்மில் வந்தே பாரத் ரயில் ஒன்று வந்து நின்றது.
இதை பார்த்ததும் அவர் உடனடியாக அந்த வந்தே பாரத் ரயிலுக்குள் ஏறி சிறுநீர் கழிப்பதற்காக அங்கிருந்த டாய்லெட் உள்ளே சென்றுள்ளார். அவர் சிறுநீர் கழித்து வெளியே வருவதற்குள் ரயிலின் கதவுகள் அடைக்கப்பட்டு ரயில் கிளம்பி விட்டது. ரயிலுக்குள்ளே அப்துல் காதர் சிக்கிக்கொண்டார் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பிளாட்பாரத்தில் இருந்தனர்.
ரயிலுக்குள்ளே தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்த அப்துல் காதர் உடனடியாக அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் நடந்ததை கூறியுள்ளார். அவர்கள் ரயிலின் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அடுத்த ஸ்டேஷனில் ரயிலை நிறுத்த கூறினர். இந்த தகவல் ரயில் பைலட்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி அடுத்த ஸ்டேஷனான உஜ்ஜைனியில் ரயில் நிறுத்தப்பட்டது.
மேலும் அப்துல் காதர் டிக்கெட் இல்லாமல் வந்தே பாரத் ரயிலில் எறியதற்காக அவருக்கு ர 1020 அபராதமாக விதிக்கப்பட்டது. இவர் உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து மீண்டும் போபாலுக்கு பஸ் மூலம் ரூ 750 செலவு செய்து வந்துள்ளார். போபால் ரயில்வே ஸ்டேஷனில் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தாங்கள் செல்ல வேண்டிய சிங்குரேலி ரயிலை ஏறாமல் அங்கேயே காத்திருந்தனர்.
இப்படியாக இவரால் போபால் முதல் சிங்குரேலி செல்லும் டிக்கெட்டையும் சிங்குரேலியிலிருந்து ரிட்டன் போபால் வரும் டிக்கெட்டையும் இவரால் பயன்படுத்த முடியவில்லை ஆகமொத்தம் இவருக்கு ரூ 6000 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழிக்க சென்றதால் இவர் ரூ 6000 வரை நஷ்டத்தை சந்தித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில்கள் நவீன வசதிகளை கொண்டுள்ளது அதே நேரம் தானியங்கி கதவுகளையும் கொண்டுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பயன்படுத்துவதற்காக தான் ரயில்வே நிலையங்களில் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன ஆனால் மக்கள் பலர் இப்படியாக ரயில்கள் ஸ்டேஷன்களில் நிற்கும் போது அதில் ஏறி அதில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறான செயலாகும்.


Click it and Unblock the Notifications









