Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற 1,100 கிமீ கடந்து வந்த மகன்... எப்படினு தெரிந்ததும் ஆச்சரியப்பட்ட பெற்றோர்
பெற்றோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக, 1,100 கிலோ மீட்டர் தொலைவை கடந்து மகன் வீட்டிற்கு வந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் ஸ்டார்ட்-அப் நிறுவனம் நடத்தி வருபவர் ராகுல் ஆர் நாயர். கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றாக வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. ஆனால் அவரது ஓட்டுனர் உரிமம் 2 மாதங்களுக்கு முன்பு காலாவதியாகியிருந்தது. எனினும் அவரால் இந்த பயணத்தை ஒத்தி வைக்க முடியாத சூழல் இருந்தது.

ஏனெனில் கொச்சிக்கு வருவதாக பெற்றோர்களிடம் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அவர்களின் மருத்துவ சிகிச்சை விஷயமாகதான் அவர் கொச்சிக்கு சென்றாக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஊரடங்கு நாட்களில் இருந்த சூழலை போல் அல்லாமல் தற்போது பொது போக்குவரத்து ஓரளவிற்கு இயல்பு நிலைக்கு வந்து விட்டதுதான். மாநிலங்களுக்கு இடையேயான பயணமும் எளிதாகியுள்ளது.

ஆனால் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய ராகுல் ஆர் நாயருக்கு தயக்கம் இருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் காரணமாக பலரும் தற்போது பொது போக்குவரத்தை தவிர்க்கின்றனர். இதன்படி பெற்றோர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, ராகுல் ஆர் நாயரும் பொது போக்குவரத்து விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தார்.
ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!
இறுதியாக தனது சைக்கிளிலேயே ராகுல் ஆர் நாயர் கொச்சிக்கு சென்று விட்டார். கடந்த நவம்பர் 18ம் தேதி அவர் பெங்களூரில் இருந்து புறப்பட்டுள்ளார். சரியாக நவம்பர் 21ம் தேதி, கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு அவர் சென்று சேர்ந்து விட்டார். பெற்றோர்களிடம் வாக்குறுதி அளித்தபடி, அவர் கொச்சி சென்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மகனின் வருகையை பார்த்து, ராகுல் ஆர் நாயரின் பெற்றோர்களான கே ராமச்சந்திரன் நாயரும், மிரினாலினியும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். கொச்சியில் வேலைகள் முடிந்ததும், ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி கடந்த நவம்பர் 27ம் தேதி அங்கிருந்து மீண்டும் சைக்கிளிலேயே ராகுல் ஆர் நாயர் பெங்களூர் புறப்பட்டுள்ளார்.

சரியாக மூன்று நாட்கள் கழித்து அவர் பெங்களூர் வந்தடைந்து விட்டார். பெங்களூரில் இருந்து கொச்சி சென்று மீண்டும் பெங்களூர் திரும்பி வந்த இந்த பயணத்தில் ஒட்டுமொத்தமாக அவர் சுமார் 1,100 கிலோ மீட்டர்கள் தொலைவை கடந்துள்ளார். இது உண்மையிலேயே அவருக்கு மிகவும் சிறப்பான ஒரு அனுபவமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ராகுல் ஆர் நாயர் சைக்கிள் பயணங்களில் அதிக ஆர்வம் உடையவர். 'டூ வீல்ஸ் அண்ட் ஏ ஹேண்டில்பார்' (Two Wheels And A Handlebar) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை அவர் பெங்களூரில் நடத்தி வருகிறார். இதன் மூலம் சைக்கிளில் தொலை தூர பயணங்களை மேற்கொள்வது மற்றும் சகிப்புதன்மை ஆகியவை குறித்து மக்களுக்கு அவர் கற்று கொடுத்து வருகிறார்.

இருந்தாலும் ராகுல் ஆர் நாயர், இவ்வளவு பெரிய தொலைவிற்கு சைக்கிளில் தனியாக பயணம் செய்துள்ளது இதுவே முதல் முறை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சைக்கிள் மூலம் பலர் ஆயிரக்கணக்கான தொலைவு பயணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது போக்குவரத்து இல்லாத சூழலில், வேலை இழந்த காரணத்தாலும், அவசர தேவைக்காகவும் பலர் இப்படி பயணம் செய்தனர்.

ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் தற்போது பொது போக்குவரத்து கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்து விட்டது. அப்படி இருக்கும்போது சைக்கிளில் இவ்வளவு கிலோ மீட்டர்கள் பயணம் செய்வது நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும். தற்போது தொலை தூர சைக்கிள் பயணங்களை மேற்கொள்ளும் ஆர்வம் பலரிடம் மேலோங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Image Courtesy: Two Wheels and a Handlebar