ஓடும் காரில் துப்பாக்கியை காட்டி ஓவராக சீன் போட்ட நபர்.. ரீல்ஸ் மோகத்தால் ரூ. 30 ஆயிரம் போச்சு!

கார்களில் சன்ரூஃப் வழங்கப்படுவதற்கான அர்த்தம் என்ன என்பதே தெரியாமல் நம்ம ஆட்கள் பலர் அதனை பயன்படுத்தி வருவதை நம்மால் காண முடிகின்றது. பெரும்பாலும் சர்ச்சையான வகையிலேயே சன்ரூஃபை பலர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில்கூட சன்ரூஃபை சர்ச்சையான வகையில் பயன்படுத்தியதற்காக சென்னையைச் சேர்ந்த இளம் ஜோடிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. சட்டக் கல்லூரி மாணவரான 23 வயதான சஞ்சய் மற்றும் அவருடைய காதலி வீணா, இருவரும் காரின் சன்ரூஃப் மீது அமர்ந்தபடி மது அருந்தினர்.

இந்தத அருவருக்கத்தக்க செயலின் காரணமாகவே அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். குறிப்பாக, கார் ஓடிக் கொண்டிருக்கும் போதே இந்த செயலில் அந்த ஜோடி ஈடுபட்டிருக்கின்றது. இது மிகவும் ஆபத்தான செயல் ஆகும். நொடிப் பொழுதில் உயிரையே அது பறிக்க நேரிடும். கூடுதலாக, அவர்களும் அந்த நேரத்தில் மது போதையில் இருந்திருக்கின்றனர்.

Dangerous stunt with gun on moving car

இந்த நிலையில் கார் லேசாக நிலை தடுமாறினாலும், அவர்களை கூடுதலாகவே நிலைகுளைய செய்துவிடும். குறிப்பாக, நிதானமற்ற நிலை காரணமாக அவர்கள் காரில் இருந்து சுலபமாக தூக்கி வீச நேரிடலாம். இதுமாதிரியான ஆபத்தான சூழலைத் தவிர்க்கும் பொருட்டே ரூஃப் வழியாக எட்டி பார்த்தபடி பயணிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

ஆனால், பலர் இதனை இப்போதும் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே மற்றுமொரு முரண்பாடன நிகழ்வு இந்தியாவில் சன்ரூஃப் சார்ந்து அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்முறை மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் உரிமையாளர், அதன் சன்ரூஃப் வாயிலாக வெளியே வந்து துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருக்கின்றார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-க்காகவே இத்தகைய செயலை அவர் செய்திருக்கின்றார். அவரின் இந்த செயலை சக வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கின்றார். இந்த வீடியோ வைரலான நிலையிலேயே காவலர்கள் அவரை கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், அவர் பயணித்த கார் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, முரண்பாடான செயலைச் செய்ததற்காக அவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவம் உபி-யிலேயே அரங்கேறி இருக்கின்றது. ஆனால், அந்த கார் டெல்லியின் பதிவெண்ணைக் கொண்டிருக்கின்றது.

ஓடும் காரின் ரூஃப் வாயிலாக வெளியே வந்தது மற்றும் துப்பாக்கியை வெளிக்காட்டியது என பல காரணங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது. ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்தில் இதுபோன்று தூப்பாக்கியை கையாள்வது என்பது மிக மிக ஆபத்தான செயல் ஆகும். துப்பாக்கியை சிறு பள்ளம்கூட சுட செய்யலாம். அதாவது, பள்ளத்தினால் ஏற்படும் குலுங்கல்கள் அவரை தெரியாமல் துப்பாக்கியை சுடச் செய்துவிடலாம்.

இவ்வாறு ஆகும் எனில், துப்பாக்கியில் இருந்து வெளியேறும் தோட்டா யாரை வேண்டுமானாலும் பதம்பார்க்க நேரிடலாம். சாலையில் அதிகம் வாகனம் ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான சூழலில் துப்பாக்கியின் தோட்டா யாரின் மீதாவது பட்டால், குறிப்பாக, ஓட்டுநர் மீது அது பேராபத்தை நொடி பொழுதில் ஏற்படுத்தி விடும்.

இத்தகைய ஆபத்தான துப்பாக்கியையே விளையாட்டாக ரீல்ஸ் மோகத்தில் வெளியேக் காட்டியபடி போஸ் கொடுத்திருக்கின்றார் அந்த நபர். உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், அதை தேவையில்லாமல் பொதுவெளியில் வெளியே எடுக்கக் கூடாது என்பது விதியாகும். அது மற்றவர்களை அச்சுறுத்தக் கூடும். இதனால்தான் இந்த செயலை தீவிரமான குற்றமாகக் கருதுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையால் எடுத்தால் மட்டுமே குற்றச் செயல்கள் அடுத்து நடைப்பெறுவதை தவிர்க்கப்படும். சன்ரூஃப்கள் காரில் உள்ள காற்றின் சுழற்சியை உறுதிப்படுத்தவே வழங்கப்படுகின்றது. ஆனால், பலர் இதனை வெளியே எட்டி பார்க்கவே வாகன உற்பத்தியாளர்கள் வழங்குவதாக தவறுதலாக புரிந்திருக்கின்றனர். இதன் விளைவாகவே இது சார்ந்த விதிமீறல்கள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2024, 22:47 [IST]
English summary
Man s dangerous stunt with gun on moving car in noida draws rs 30000 fine
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+