மழை வெள்ளத்தில் பைக்குடன் இழுத்துச் செல்லப்பட்டவர் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சிகள்!

By Saravana

கனவிலும் நினைத்து பார்த்திராத மிக மோசமான, கசப்பான தருணங்களை கடந்து கொண்டிருக்கிறது சென்னை மாநகரம். இயற்கை சீற்றத்திடம் தோற்றுப் போய்விட்ட சென்னை கட்டமைப்பு வசதிகள், மக்களின் இயல்பு நிலையை முற்றிலும் முடக்கி போட்டுவிட்டது.

மின்சாரம், தொலைதொடர்பு வசதிகள், சாலைகள் துண்டிக்கப்பட்டு குடி தண்ணீர், உணவு இல்லாமல் பல லட்சம் பேர் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதும், சில சாலைகளில் மழை வெள்ள நீர் ஆறுகள் போல ஓடுவதும் போக்குவரத்தை முடக்கியிருக்கிறது. இதனால், பல ஆயிரக்கணக்கான பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டவர் மீட்பு

அத்தியாவசியத்திற்காகவும், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியோரும் வெளியே செல்வதை தவிர்க்க முடியாமல் வெளியே சென்று அவதிப்பட்டு வருகின்றனர். எப்போது வீடு வந்து சேருவோம் என்றே தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மனிதாபிமானம்

மனிதாபிமானம்

அதுபோன்று, பைக்கில் சென்ற ஒருவரை சாலையின் குறுக்கே பாய்ந்து சென்ற வெள்ளம் பைக்குடன் இழுத்துச் செல்கிறது. இதனைக் கண்ட, அந்த வழியாக சென்றவர்கள் சிறிதும் யோசிக்காமல், ஓடிச்சென்று அவரை காப்பாற்றிய சம்பவமும் நேற்று நடந்தது. மனித சங்கிலி அமைத்து அவரையும், அவரது பைக்கையும் பத்திரமாக மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. கூடுவாஞ்சேரி- படப்பை சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உதவிகள்

உதவிகள்

சென்னையில் இதுபோன்று பல நெகிழ்ச்சியான சம்பவங்களும், உதவிகளும் செய்யப்பட்டு வருவது ஆறுதல் அளிக்கும் விஷயம். மனிதாபிமானம் இல்லையென்று ஒரு பக்கம் கூறினாலும், இதுபோன்ற சம்பவங்கள் மனித இனத்துக்கும், மனதுக்கும் ஆறுதல் தரும் செய்தியாக இருக்கிறது.

பாதுகாப்பாக இருங்கள்

பாதுகாப்பாக இருங்கள்

தற்போதைய நிலையில், அனைத்து சாலைகளும், பகுதிகளும் துண்டிக்கப்பட்டிருப்பதால் வெளியில் செல்வதை அறவே தவிர்க்க வேண்டிய நிலைதான் சென்னையில் காணப்படுகிறது. வாகனங்களில் செல்வதை அறவே தவிர்க்க வேண்டிய தருணம் இது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அப்படியே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சாலைகளை அவசரமாக கடக்க முற்படாதீர்கள். மிகுந்த எச்சரிக்கையுடன் செல்வதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே சாலைகளில் வெள்ள நீரை கடக்க முயற்சி செய்யவும். இல்லையெனில், மாற்றுப் பாதையில் செல்ல திட்டமிடுவது அவசியம். இல்லையெனில், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை நீங்களே சந்திக்க நேரிடலாம்.

உதவி எண்கள்

உதவி எண்கள்

வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கான உதவி எண்கள் விபரம்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Man saved from being washed off in Chennai flood waters
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X