கார் வாங்குவதற்காக இந்த அமெரிக்கர் செய்த காரியத்தை பாருங்கள்!!

கார் வாங்குவதற்காக கொஞ்சம் ஓவரான காரியங்களில் சிலர் இறங்குவதுண்டு. அதுபோன்ற ஒரு செயலை அமெரிக்காவை சேர்ந்த மார்க் பரிசி செய்துள்ளார்.

இந்த நடுத்தர வயது கார் பிரியருக்கு நிசான் ஸ்போர்ட்ஸ் 370இசட் கார் மீது தீராத காதல். எதை விற்றாவது அதை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். அப்படி அவர் விற்றது வீட்டையோ அல்லது நிலத்தையோ அல்ல... அப்படி என்னதான் விற்றார்?

விற்றது எது?

விற்றது எது?

அவர் விற்றது வேறொன்றுமில்லை. அவரது விதைப் பையைதான். ஆம், நிசான் 370இசட் ஸ்போர்ட்ஸ் காரை வாங்க வேண்டி தனது விதைப் பை ஒன்றினை மட்டும் விற்பனை செய்வதாக ஒரு பிரபலமான டிவி ஷோவில் பரிசி அறிவித்தார்.

கனவு கார்

கனவு கார்

நிசான் 370இசட் ஸ்போர்ட்ஸ் கார்தான் எனது கனவு. அதை வாங்குவதற்காக இந்த முடிவை எடுத்தேன் என்றார். அந்த காருக்காக இரண்டில் ஒன்று போனாலும் பரவாயில்லை என்று டிவி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

விலை

விலை

35,000 டாலர் விலையில் தனது விதைப்பையை விற்பனைக்கு கொடுப்பதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அவரது விதைப் பை ஒன்றை மருத்துவ ஆராய்ச்சிகாக ஒரு அமைப்பு வாங்கியது.

கனவு நனவானது

கனவு நனவானது

விதைப் பையை விற்று வந்த பணத்தில் நிசான் 370இசட் காரை அவர் வாங்கியுள்ளார். அந்த காரில்தான் தற்போது சிங்கிளாக செல்கிறார்.

விலை

விலை

அமெரிக்காவில் நிசான் 370இசட் ஸ்போர்ட்ஸ் கார் 29,900 டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.55 லட்சம்.

நல்ல வேளை

நல்ல வேளை

நல்ல வேளையாக நடிகர் சந்தானம் மாதிரி கனவில் ரோல்ஸ்ராய்ஸ் கார் வரவில்லை. இல்லாட்டி, ரெண்டு போயிருக்கும்.

நிசான் 370 இசட்

நிசான் 370 இசட்

பெரும் விலையை கொடுத்து பரிசி வாங்கியுள்ள நிசான் 370இசட் ஸ்போர்ட்ஸ் காரில் இருக்கும் அப்படி என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள் இங்கே கிளிக் செய்யவும். கையில இருக்கிற பணத்துக்கு ஒரு செகண்ட் காரையாவது வாங்கிக்கலாம் பாஸ்.. ஆனா, செகண்ட் ஹேண்டில்.... சான்சே இல்ல.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2013, 13:27 [IST]
English summary
Mark Parisi, a middle aged man sold his testicle to fulfill his dream to buy a Nissan 370z car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+