இப்படி அந்த கோவாவுக்கு போயே ஆகணுமா! கர்நாடகாவில் இருந்து கோவாவிற்கு இ-ஸ்கூட்டரை தள்ளியே சென்ற இளைஞர்..
கோவா, இந்தியாவின் மிக சிறந்த சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்றாகும். இளைஞர்கள் அதிகம் செல்ல துடிக்கும் ஓர் இடமாகவும் இது பார்க்கப்படுகின்றது. இத்தகைய இடத்திற்கே இளைஞர் ஒருவர் தன்னுடைய எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனத்தை தள்ளியேச் சென்று சேர்ந்திருக்கின்றார். அவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்தே கோவாவிற்கு அந்த வாகனத்தை தள்ளிக் கொண்டே சென்றிருக்கின்றார். இது பலருக்கும் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இப்படி அந்த கோவாவிற்கு போயே ஆக வேண்டுமா என்கிற கேள்வியையும் நம் மத்தியில் எழுப்பி இருக்கின்றது.
குறிப்பாக, டூ-வீலர் கையில் இருந்தும் ஏன் இப்படி தள்ளிக் கொண்டே சென்றார்?, ஏதேனும் வேண்டுதலாக இருக்குமோ?, என்கிற கேள்வியையும் நம் மனதில் இந்த நிகழ்வு தோன்ற செய்திருக்கின்றது. இதுதவிர, ஒருவேளை அந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் பிரேக் டவுன் ஆகியிருக்குமோ என்றும் நம்மை கேட்கச் செய்திருக்கின்றது.

ஆனால், இதுமாதிரியான எந்தவொரு காரணமும் இதற்கு பின்னால் இல்லை. வேறொரு அதிர்ச்சிகரமான காரணமே இதற்கு பின்னால் உள்ளது. அரசாங்கமே இவரின் இந்த நிலைமைக்கு காரணமாக உள்ளது. அரசு மக்களை மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மானியம் அதில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சார்ஜிங் கட்டமைப்பை மிகப் பெரிய அளவில் உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்து வருகின்றது. இதை நம்பி பலர் இ-வாகனங்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இளைஞர் சென்ற அந்த ரூட்டில் ஒரு சார்ஜிங் மையம் கூட இல்லையாம்.
இந்த நிலையே அவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கர்நாடகாவில் இருந்து கோவாவிற்கு தள்ளிக் கொண்டே செல்ல செய்திருக்கின்றது. சுமார் 20 கிமீ தூரம் வரை எலெக்ட்ரிக் வாகனத்தை அவர் தள்ளியேச் சென்றிருக்கின்றார். இது மின்சார வாகன உரிமையாளர்களை மிகப் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.
அந்த 20 கிமீ இடைவெளியில் அவர் மொத்தமாக மூன்று பெட்ரோல் பங்க்குகளைக் கடந்திருக்கின்றார். ஆனால், ஒரு பங்க்கில்கூட சார்ஜிங் மையம் இல்லை என அவர் வருத்தம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியின் உச்சம். குறிப்பாக, பல கிராமங்களில் மின்சார தடை பிரச்னையையும் அவர் சந்தித்து இருக்கின்றார்.
ஏற்கனவே மின்சார வாகன உரிமையாளர்கள் இ-வாகனங்களால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் சூழலில் இந்த மாதிரியான பிரச்னையும் நாட்டில் இருக்கின்றது என்பதே இந்த நிகழ்வின் வாயிலாக நமக்கு தெரிய வந்திருக்கின்றது. இது புதிதாக இ-வாகனங்களை வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தின் வாயிலாக நாட்டில் இன்னும் பல பகுதிகளில் முழுமையாக சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை, அவற்றிற்கு இப்போதும் பற்றாக் குறை உள்ளது என்பதையும் இந்த நிகழ்வு உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, நீங்கள் இ-வாகனத்தில் பயணிக்கும் முன் ஓர் சிறந்த திட்டத்தை வகுத்து அதற்கு பின்னரே பயணித்தைத் தொடங்க வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு நமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது.
நாம் பயணிக்க இருக்கும் அந்த குறிப்பிட்ட ரூட்டில் மின்சார வாகன சார்ஜிங் பாயிண்ட் உள்ளதா? குறிப்பாக, அது பயன்பாட்டில் இருக்கின்றதா? என்பதை தெரிந்துக் கொண்டு பின்னர் அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லை எனில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர் கர்நாடகாவின் கர்வர் தொடங்கி கோவா வரை வாகனத்தைத் தள்ளிக் கொண்டே போனதைப் போல நாமும் இந்தியாவின் ஏதேனும் ஓர் மூலையில் இ-வாகனத்தைத் தள்ளிக் கொண்டே செல்ல நேரிடலாம்.


Click it and Unblock the Notifications








