ஷோரூமில் இருந்து ஆசை ஆசையாய் டெலிவிரி எடுத்தது இதுக்குதானா? பிராண்ட்-நியூ பைக்கை தெறிக்கவிட்ட இளைஞர்!!
இந்தியாவில் கடந்த காலங்களில் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்குகளுக்கு பெரியதாக மார்க்கெட் இருந்தது இல்லை. ஆனால், சமீப காலமாக அட்வென்ச்சர் பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. நீண்ட சஸ்பென்ஷன் (Suspension) உடன் பள்ளம் மேடான சாலைகளை கையாளக் கூடியவை அட்வென்ச்சர் பைக்குகள் ஆகும்.
முன்பக்க மட்கார்ட் (Mudguard) நன்கு மேலே தூக்கப்பட்டு இருக்குமே அவை தான் அட்வென்ச்சர் பைக்குகள் ஆகும். இத்தகைய பைக்குகளை கடந்த சில வருடங்களாக மக்கள் பலர் அதிகமாக வாங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, இளம் தலைமுறையினரின் பிரதானமான தேர்வுகளுள் ஒன்றாக அட்வென்ச்சர் பைக்குகள் உள்ளன. அட்வென்ச்சர் பைக்குகள் இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

ஆனால், இந்த டிரெண்ட்டை வேகப்படுத்திய பெருமை ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தையே சேரும். இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோவில் இருந்து குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 (Xpulse 200) அட்வென்ச்சர் பைக் இந்திய பைக் சந்தையில் கடந்த சில வருடங்களாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஹீரோவை போல் அட்வென்ச்சர் பைக்குகள் விற்பனையில் ஈடுப்பட்டுவரும் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் (KTM) நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் (390 Adventure) பைக்கிற்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 4 லட்ச ரூபாய் வரையில் பணத்தை செலவு செய்து பைக் வாங்க தயாராக இருக்கும் இளைஞர்கள் பலர் வாங்குவது கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கை ஆகும்.
இதனாலேயே மேலும் கஸ்டமர்களை கவரும் விதமாக குறைந்த விலையிலான 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கையும் இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்கிறது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் போன்ற பவர்ஃபுல்லான பைக்குகளை கண்ட்ரோல் செய்வதற்கு தனி திறன் வேண்டும். பைக்கில் ஏறி அமர்வதற்கு முன்பே, 390 அட்வென்ச்சர் பைக் அதன் பிரம்மாண்டமான தோற்றத்தால் பார்க்கும் எவரொருவரையும் வசீகரித்துவிடும்.
இத்தகைய அசாதாரணமான பைக்கில் இங்கு ஒரு இளைஞர் சாகசம் காட்டி உள்ளார். சாதாரணமான சாலைகளில் இவ்வாறு செய்வதே தவறு எனும்போது, இந்த இளைஞர் வளைவு நெளிவுகளை அதிகம் கொண்ட மலைப்பாதையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்து காட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியிடப்பட்டுள்ள வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.
ஆனால், இந்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் ரைடரோ ஆபத்தை உணராமல் பைக்கின் ஹேண்டில்பாரை பிடிக்காமல், எழுந்து நின்றப்படி பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். இவ்வாறு சில மீட்டர் தொலைவிற்கு மட்டும் செல்லவில்லை... கிட்டத்தட்ட 1 கிமீ தொலைவிற்கு ஹேண்டில்பாரை பிடிக்காமல் பைக்கில் இருந்து எழுந்து நின்றப்படி பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார்.
வீடியோவில் காட்டப்பட்ட வரையில் 1கிமீ இருக்கும். அதன்பின் எவ்வளவு தொலைவிற்கு இவ்வாறு எழுந்து நின்றப்படி சென்றார் என்பது தெரியவில்லை. வீடியோவில் காட்சி தருவது முற்றிலும் புதிய 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் எஸ் பைக் ஆகும். அதாவது, 2025ஆம் ஆண்டிற்காக கொண்டுவரப்பட்ட அனைத்து அப்டேட்களையும் இந்த பைக் கொண்டுள்ளது. இத்தகைய பைக்கை வாங்கிய சந்தோஷத்தில்தான் ஆர்வ மிகுதியில் இந்த இளைஞர் இவ்வாறு செய்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் இருப்பதாக கூறியப்படி இந்த சாகசத்தை செய்துள்ளனர். எவ்வளவு அதிநவீன தொழிற்நுட்பமாக இருப்பினும் ஒரு கட்டம் வரையில்தான் பலன் கொடுக்கும். மலைப்பாதைகளில் சாதாரணமாக வாகனம் ஓட்டும்போதே அதிக விபத்துகள் நடைபெறும் சூழலில், இவ்வாறான பைக் சாகசங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.


Click it and Unblock the Notifications








