Just In
- 2 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 3 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 4 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 6 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாலதான் இந்த கூத்து நடக்கும்! ஜேசிபிய இதுக்கும் யூஸ் பண்ணலாம்னு கண்டுபிடிச்சவங்களுக்கே தெரியாது
ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி முதியவர் ஒருவர் செய்த வினோதமான காரியத்தின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஜேசிபி இயந்திரம் மூலம் என்னென்ன வேலைகளை எல்லாம் செய்ய முடியும்? என்பது நம் அனைவருக்குமே தெரியும். கட்டுமான பணிகளில்தான் ஜேசிபி இயந்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கட்டிடங்களை இடிக்கவும், பள்ளம் தோண்டவும் என ஜேசிபி இயந்திரத்தின் பயன்பாடுகளை அடுக்கி கொண்டே போகலாம்.

ஆனால் ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி வேறொன்றையும் செய்ய முடியும் என்பதை, முதியவர் ஒருவர் காட்டியிருக்கிறார். ஜேசிபி இயந்திரம் மூலம் இதை செய்யலாமா? என நீங்கள் கனவில் கூட நினைத்து பார்த்திருக்காத ஒரு விஷயம் அது. ஆம், ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி அந்த முதியவர் முதுகு சொறிந்துள்ளார்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தற்போது அந்த காணொளிதான் இணையத்தை கலக்கி கொண்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெறும் இடம் போல தோற்றமளிக்கும் ஒரு இடத்தில், முதியவர் ஒருவர் நின்று கொண்டிருப்பதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. அவருக்கு பக்கத்திலேயே ஜேசிபி இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சமயத்தில், காணொளியில் தோன்றும் முதியவர் துண்டு மூலம் தனது முதுகை துடைக்கிறார்.

ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இதனால் ஜேசிபி இயந்திரத்தை நோக்கி அவர் நகர்கிறார். பின்னர் ஜேசிபி இயந்திரத்தை இயக்கும் நபரிடம் உதவி கேட்கிறார். உடனே ஜேசிபி ஆபரேட்டரும், அதன் பக்கெட் (Bucket) மூலமாக, அந்த முதியவரின் முதுகை சொறிந்து விடுகிறார். இரண்டு பேரும் வேடிக்கையாக சிரித்து கொண்டே இதனை செய்கின்றனர்.

அப்துல் நாசர் என்பவரின் முகநூல் பக்கத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த காணொளி, தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்க்கும் பலரும் 2 விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் இது வேடிக்கையாக இருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதே சமயம் இன்னும் சிலரோ, இந்த ஸ்டண்ட் மிகவும் அபாயகரமானது மற்றும் பொறுப்பற்ற செயல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களை பயன்படுத்தி, மிகவும் அபாயகரமான ஸ்டண்ட்கள் பலவற்றை ஒரு சிலர் செய்கின்றனர். இந்த வகையில் ஜேசிபியை பயன்படுத்தி இந்த ஸ்டண்ட் தற்போது செய்யப்பட்டுள்ளது.

இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், பொறுப்பற்ற செயல் என்றுதான் பலரும் எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமே இதுபோன்ற வினோதங்கள் நடக்கும் என்றும், ஜேசிபியை இதுபோன்று பயன்படுத்தலாம் என்று, அமெரிக்கர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் தெரியாது என்றும் ஒரு சிலர் வேடிக்கையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த காணொளி கேரள மாநிலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜேசிபி இயந்திரத்தை இதுபோன்று வித்தியாசமாக பயன்படுத்துவது இது முதல் முறை கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெண்கள் சிலர் லாரியின் பின் பகுதியில் இருந்து இறங்குவதற்கு ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தினர்.
அதாவது உயரம் அதிகமாக இருந்ததால், லாரியில் இருந்து பெண்களால் கீழே இறங்க முடியவில்லை. எனவே ஜேசிபி இயந்திரத்தின் பக்கெட்டில் அவர்கள் ஏறி நின்று கொண்டனர். அவர்களை ஜேசிபி இயந்திரத்தை இயக்கும் நபர் பத்திரமாக கீழே இறக்கி விட்டார். இந்த காணொளியும், அந்த சமயத்தில் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.