71 நிமிஷம் வெயிட் பண்ணா தான் ஒரு ஆட்டோ கிடைக்கும்! இப்படி டிராஃபிக் இருந்தா என்ன பண்ண முடியும்?
பெங்களூருவில் உபேர் ஆப் மூலம் ஆட்டோ புக் செய்தவருக்கு கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக 71 நிமிடம் காத்திருப்பு நேரம் காட்டிய ஸ்கிரீன் ஷாட் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் அதிகமான நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சிறு நகரங்களில் சாதாரணமாக இருக்கும் ஒரு பயணம், பெங்களூரு போன்ற நகரங்களில் நீண்ட நேரப் பயணமாக இருக்கும்.

சமீபத்தில் பெங்களூருவில் ஒருவர் தன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளார். தனது உபேர் ஆப் மூலம் புக்கிங் செய்துள்ளார். இந்த ஆட்டோ அவர் இருக்கும் பகுதியிலிருந்து சற்று அதிக தூரத்திலிருந்துள்ளது. அப்பொழுது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆட்டோ அவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேருவதற்கே 71 நிமிடங்கள் வரை ஆகும் எனக் காட்டியுள்ளது.
இதை அவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த பகிர்வு தற்போது வைரலாக பரவி வருகிறது. இவர் பதிவு செய்துள்ள ஸ்கிரீன் ஷாட்டில் இவர் புக் செய்த ஆட்டோ இவர் புக் செய்த இடத்திலிருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் இருப்பது போல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் அவர் ஆட்டோ டிரைவர் தன்னை பிக்கப் செய்ய வந்தால் பெரிய மரியாதை அவர் மீது வரும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர் இந்த ஆட்டோவிற்காக நீங்கள் அதிக நேரம் காத்திருந்தால் உங்கள் மீது பெரிய மரியாதை ஏற்படும் எனக் கருத்திட்டிருந்தார். அதற்கு இந்தப்பதிவைப் போட்டவர், இந்த ஆட்டோ டிரைவர் அடுத்த ஒரு நிமிடத்தில் ரைடை கேன்சல் செய்துவிட்டதாகப் பதில் கருத்தைப் போட்டிருந்தார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள பெரு நகரங்களில் இந்த பிரச்சனை இருக்கிறது. குறிப்பாகப் பெங்களூருவில் அடிக்கடி டிராஃபிக் ஜாம் ஏற்படுவதால் மக்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்தும் அதுபெரிய அளவில் பலனளிக்கவில்லை. இந்த நெருக்கடிப்பிரச்சனைக்கு ஒரு தீர்வுகாண அரசும் போராடி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் இந்த நெருக்கடி பிரச்சனைகளைச் சமாளிக்க முடிந்தளவு தங்கள் பயணத்தை பொது போக்குவரத்தில் செய்ய வேண்டும். தற்போது தனி நபர் செல்வதற்காகக் காரை பயன்படுத்துகின்றனர். இது சாலையில் அதிகமாக இட நெருக்கடியை ஏற்படுத்தும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினால் நெருக்கடி குறையும், அதிக டிமாண்ட் காரணமாக அரசும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.


Click it and Unblock the Notifications
