உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கனு கேள்விப்பட்டு இருப்பீங்க... வேகன்ஆர் காரில் போகும்போதே டவுட் வந்துச்சு

துல்கர் சல்மான் (Dulquer Salmaan), இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் பிரபலமான மலையாள நடிகர். தமிழ்நாட்டிலும் இவருக்கு என்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. நடிப்பது மட்டுமில்லாமல், தந்தை மம்முட்டியை போன்று விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளை அவ்வப்போது வாங்குவதை வாடிக்கையாக கொண்டவர் நடிகர் துல்கர் சல்மான் ஆவார். சொல்லப் போனால், அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) என்கிற எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் உற்பத்தி நிறுவனத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்து அந்த நிறுவனத்தின் பங்குத்தாரர்களில் முக்கியமானவராக உள்ளார்.

மார்க்கெட்டிற்கு புதியதாக வரும் கார்களை அவ்வப்போது வாங்கிவிடக் கூடியவரான நடிகர் துல்கர் சல்மானின் வீட்டில் ஏகப்பட்ட விலையுயர்ந்த சொகுசு கார்கள் நிற்கின்றன. இந்த கார்களை நிறுத்துவதற்கு என்றே தனியாக ஒரு கேரேஜை வீட்டின் வளாகத்திற்குள் துல்கர் சல்மான் பராமரித்து வருகிறார். விலையுயர்ந்த கார்கள் மட்டுமில்லை, மிகவும் அரிதான பழமையான கார்களையும் இந்த மலையாள நடிகர் வைத்துள்ளார்.

man look like actor dulquer salmaan

ஏகப்பட்ட கார் & பைக்குகளை வைத்திருப்பினும், விலை குறைவான மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) காரையும் நடிகர் துல்கர் சல்மான் வைத்துள்ளாரா என நாம் ஆச்சிரியப்படும் வகையில், இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வேகன்ஆர் காரில் நடிகர் துல்கர் சல்மான் ஏறி செல்வது போல் அந்த வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது.

பல விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கும் துல்கர் சல்மான் வேகன்ஆர் போன்ற விலை குறைவான காரில் செல்கிறாரா என பலரும் ஆச்சிரியத்துடன் அந்த வீடியோவை பகிர்ந்தனர். ஆனால், இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இவர் நடிகர் துல்கர் சல்மானே கிடையாது. அவரை போலவே அச்சு அசல் உருவம் கொண்ட வேறொரு நபர். இவரும் கேரளாவில்தான் உள்ளார்.

உலகத்தில் ஒரே உருவம் கொண்ட ஏழு பேர் இருப்பார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறோம், இதில் 2வது துல்கர் சல்மானையும் பார்த்துவிட்டோம். மீதி ஐந்து பேர் எந்த ஊரில் எந்த ரூபத்தில் அலைந்துக் கொண்டு இருக்கிறார்களோ... துல்கர் சல்மான் என வைரலாகி வரும் இந்த வீடியோவில் காட்சி தருபவரின் பெயர், அனீஷ்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி கொடுப்பவரான அனீஷை நடிகர் துல்கர் சல்மான் என நினைத்து படம் பிடித்தவருக்கு கொஞ்ச நேரத்திலேயே இது அந்த நடிகர் கிடையாது என்பதை அறிந்து அவருடன் பேசியுள்ளார். நடிகர் துல்கர் சல்மான் இவ்வாறு வேகன்ஆர் காரில் சென்றாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில், பெரும்பாலான மலையாள நடிகர்களை போன்று துல்கர் சல்மானும் எளிமையான வாழ்க்கையை விரும்பக் கூடியவர் ஆவார்.

maruti suzuki wagonr car

அதேபோல், மாருதி சுஸுகி வேகன்ஆர் காரையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. உயரமான மற்றும் அதேநேரம் அளவில் சிறியதான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் அதன் நீடித்து உழைக்கும் தன்மைக்காகவும், அதன் அதிக மைலேஜிற்காகவும் மக்கள் மத்தியில் பிரபலமானது ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 15 ஆயிரம் வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மாருதி சுஸுகி வேகன்ஆர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.86 லட்சத்தில் இருந்து ரூ.9.02 லட்சம் வரையில் உள்ளன. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் வேகன்ஆர் காரில் 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இரு விதமான பெட்ரோல் என்ஜின்கள் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன. டீசல் என்ஜின் உடன் வேகன்ஆர் விற்பனை செய்யப்படுவது இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுப்பவரான அனீஷுக்கு, தன்னை நடிகர் துல்கர் சல்மான் என நினைத்து மற்றவர்கள் குழம்பி போவது வாடிக்கையான விஷயமாக இருக்கும். அதனால்தான், தற்போது வீடியோவை வெளியிட்ட நபர் அவ்வாறு குழம்பி போன போதும் அதனை அனீஷ் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. நடிகர் துல்கர் சல்மான் போன்று இருப்பவர்கள் அனைவரிடத்திலும் வேகன்ஆர் போன்ற தரமான கார்கள் இருக்க தான் செய்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 27, 2025, 16:01 [IST]
English summary
Man who look like actor dulquer salmaan drove maruti suzuki wagonr car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X