பைக்கில் நாடு நாடா சுற்றியவர் வாழ்க்கை மொத்தமா மாறி போச்சு! பெற்றோருடன் கேடிஎம் ஷோரூமில்...

கேடிஎம் (KTM) நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியாவிலும் சரி, உலகளவிலும் சரி எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அதிலிலும் குறிப்பாக, கேடிஎம் நிறுவனத்தின் மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிளாக விளங்கும் 390 அட்வென்ச்சர் (390 Adventure) பலரது விருப்பமான மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது.

இத்தகைய கேடிஎம் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை தான் இங்கே ஒருவர் தனது இரண்டாவது 390 அட்வென்ச்சர் பைக்காக வாங்கி உள்ளார். இந்தியாவில் தினமும் யாராவது ஒருவர் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கை வாங்குகின்றனர் என்றாலும், இந்த நபரை மட்டும் குறிப்பிட்டு பார்ப்பதற்கு காரணம், இந்த நபர் பைக்கிலேயே சுமார் 46 நாடுகளை சுற்றி வலம் வந்தவர் ஆவார்.

brand-new ktm 390 adventure

இவரது பெயர் அன்கிட் லம்பா (Ankit Lamba) ஆகும். பைக் பயணங்களை விரும்ப கூடியவராகவும், அதுகுறித்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடியவராகவும் விளங்கும் அன்கிட் லம்பா, 46 நாடுகளில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பைக்கில் பயணம் செய்து சாதனை படைத்தவர் ஆவார்.

இந்த அசாத்தியமான பைக் பயணத்தை தனது கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் அன்கிட் லம்பா நிகழ்த்திக் காட்டினார். தற்போது அந்த 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு மாற்றாக தான் புதியதாக மேலும் ஒரு கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கை அன்கிட் லம்பா வாங்கி உள்ளார். தாய், தந்தை உடன் கேடிஎம் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ 390 அட்வென்ச்சர் பைக்கை டெலிவிரி (Delivery) பெறுவதை இவர் தனது இன்ஸ்டாகிராமில் படங்களாக வெளியிட்டுள்ளார்.

brand-new ktm 390 adventure

இந்த படங்களில் புத்தம் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் டிரைவர் சீட்டில் அப்பா அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் அன்கிட் லம்பா அமர்ந்திருக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. புதிய 390 அட்வென்ச்சர் பைக் தனக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என கூறும் அன்கிட் லம்பா, இந்த பைக் 30கிமீ மைலேஜ் மற்றும் நீண்ட வருடங்களுக்கு உழைக்கக்கூடியது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தனக்கு மிகவும் பிடித்த பைக் வசதியான க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) இந்த பைக்கில் இருப்பதாக சந்தோஷமாக தெரிவித்துள்ள அன்கிட் லம்பா, ஷோரூமில் இருந்து பைக்கை டெலிவிரி பெற்றதும் நேராக பெற்றோருடன் கோவிலுக்கு ஓட்டி சென்றுள்ளார். க்ரூஸ் கண்ட்ரோல் ஆனது பழைய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

brand-new ktm 390 adventure

பழைய 390 அட்வென்ச்சர் பைக்கில் மேற்கொள்ளப்பட்ட பயணம் அளவிற்கு இல்லையென்றாலும், புதிய 390 அட்வென்ச்சர் பைக்கில் 25 ஆயிரம் கிமீ பயணத்தை இந்தியா முழுவதும் மேற்கொள்ள போவதாக வீ-லாகர் (Vlogger) அன்கிட் லம்பா தெரிவித்துள்ளார். பழைய பைக்கிற்கு 'சார்லி' (Charlie) என பெயர் வைத்திருந்த இவர், புதிய 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு 'சாஸெர்' (Chazer) என பெயர் சூட்டி உள்ளார்.

கேடிஎம் நிறுவனம் புதிய 390 அட்வென்ச்சர் பைக்கை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் பைக்கின் முன்பக்கத்தில் செங்குத்தாக பொருத்தப்பட்ட ட்யூயல் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால், கேடிஎம் நிறுவனத்தின் 790 மற்றும் 890 அட்வென்ச்சர் பைக்குகளை போன்ற முன்பக்கத்துடன் 2025 390 அட்வென்ச்சர் பைக் காட்சியளிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம் நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய அட்வென்ச்சர் பைக்காக இருப்பதினாலேயே 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு உலகம் முழுக்கவே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்தகைய பைக்கை ஒன்றிற்கு இரண்டாக வாங்கி இருப்பதில் இருந்து இந்த பைக்கிற்கு இந்த வீ-லாகர் எந்த அளவிற்கு ரசிகராக உள்ளார் என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 26, 2025, 11:09 [IST]
English summary
Man who traveled 46 countries on bike bought brand new ktm 390 adventure
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X