லாட்டரியில் விழுந்த லாம்போர்கினி கார்! ஒரு வாரம் கூட ஒழுங்கா ஓட்டல அதுக்குள்ள இப்படியாகிடுச்சே!
சிலருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் எனச் சொல்லுவார்கள். இப்படியாக ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம் சில நாட்கள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியில் சூப்பர் கார் பரிசாக விழுந்து அந்த காரை அவரால் சில நாட்கள் கூட அனுபவிக்க முடியாமல் போனது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கிராண்ட் பர்நெட், 24 வயதான இவர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்நாட்டுக் காசிற்கு 99 பென்ஸ், அதாவது இந்திய மதிப்பில் ரூ693க்கு இந்த லாட்டசி சீட்டை வாங்கியுள்ளார். இவருக்கு அடித்த அதிர்ஷ்டமாக இவருக்கு அந்த லாட்டரி சீட்டில் லாம்போர்கினி ஹரகேன் கார் பரிசாக விழுந்துள்ளது.

இந்த கார் ஒரு சூப்பர் காராகும். பலருக்கு இந்த காரில் வாழ்நாளில் ஒரு முறையாவது பயணித்து விட வேண்டும் என்பதே கனவாக இருக்கும். ஆனால் இவருக்கு இந்த காரே சொந்தமாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் இந்த காரை சொந்தமாக வாங்கிக்கொள்ள முடிவு செய்தார்.
லாட்டரி நிறுவனம் அவருக்கு கார் வேண்டாம் என்றால் 1 லட்சம் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ87 லட்சம் வரை பணமாக வழங்க ஆஃபரை வழங்கியது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டு தனக்கு கார் தான் வேண்டும் எனக் காரை வாங்கிக்கொண்டார். அதன் பின் லாட்டரி நிறுவனம் அவருக்கு அந்த காரை பரிசாக வழங்கியது.
அவர் காரை வாங்கியதும் சாம்பெயின் பாட்டிலை உடைத்து அந்த தருணத்தைக் கொண்டாடியுள்ளார். அப்பொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளது. இவர் காரை வாங்கி ஜாலியாக லண்டன் நகரில் வலம் வந்துள்ளார். ஆனால் இவர் போதாத காலம் இந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்து குறித்து பார்னட்டே தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் காரை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்து பசு மாடு ஒன்று வேகமாக வந்து காரின் மீது முட்டியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் பல முறை சுற்றி விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்து ஓட்ட முடியாத நிலைக்குச் சென்றது. இந்த விளக்கத்தைப் பார்த்து பலருக்கு அதிர்ச்சியும், வருத்தமும் ஏற்பட்டது. பலர் இந்த விபத்து குறித்து அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். அவரும் அதற்கு விளக்கமளித்துள்ளார். நல்ல வேளையாக இந்த விபத்தில் அவருக்கு எதுவும் ஆகவில்லை.
லாட்டரியில் கூரையை பிய்த்துக்கொண்டு லாம்போர்கினி சூப்பர் காரை பரிசாக கிடைக்கும் அதிர்ஷ்டம் பார்நெட்டிற்கு இருந்தாலும், அதை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் அவருக்கு இல்லை. சூப்பர் கார்களை வாங்குவதை விட அதைப் பத்திரமாக பாதுகாப்பு தான் பெரிய விஷயம்.
சூப்பர் காரை பாதுகாக்க சில நேரம் அந்த காரை வாங்கியதை விட அதிகமாகச் செலவாகும் வாய்ப்பு கூட ஏற்படும். இதே போல உங்களுக்கு லாட்டரி சீட்டு அடித்திருந்தால் இந்த காரை வாங்கியிருப்பீர்களா? அல்லது பணத்தை வாங்கியிருப்பீர்களா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








