பதுங்கி பாய போறாங்க... திடீரென அதிரடி முடிவை எடுத்த போலீஸ்... இப்படி ஒரு ட்விட்ஸ்டை யாருமே எதிர்பாக்கல!
யாருமே எதிர்பார்க்காத வகையில், காவல் துறையினர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட்களை அணிய வேண்டும் என்ற விதிமுறையை இந்தியா முழுவதும் போக்குவரத்து காவல் துறையினர் தற்போது தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே கார்களில் பின் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய கூடிய பயணிகளும் சீட் பெல்ட்களை அணிய வேண்டும்.

கார்கள் எதிர்பாராதவிதமாக சாலை விபத்துக்களில் சிக்கினால், பயணிகளை பாதுகாக்கும் விஷயத்தில் சீட் பெல்ட்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவேதான் சீட் பெல்ட்கள் விஷயத்தில் போக்குவரத்து காவல் துறையினர் தற்போது கெடுபிடி காட்ட தொடங்கியுள்ளனர். இதற்கு மும்பை போக்குவரத்து காவல் துறையினரும் விதிவிலக்கு அல்ல.

கார்களில் பயணம் செய்ய கூடிய அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற உத்தரவை மும்பை போக்குவரத்து காவல் துறையினர் சமீபத்தில் பிறப்பித்திருந்தனர். இந்த உத்தரவு இன்று முதல் (நவம்பர் 1) அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் இந்த அதிரடி உத்தரவு மும்பையில் இன்று அமல்படுத்தப்படவில்லை.

கடுமையாக அமல்படுத்தப்படும் என கருதப்பட்ட சூழலில், யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்த உத்தரவு அமலுக்கு வரும் தேதியை மும்பை போக்குவரத்து காவல் துறையினர் ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் இது தற்காலிகமான முடிவுதான். அதாவது நவம்பர் 10ம் தேதி வரை மட்டுமே இந்த முடிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மும்பை காவல் துறையின் (போக்குவரத்து) துணை ஆணையர் ராஜ் திலக் ரோஷன் கூறுகையில், ''அடுத்த 10 நாட்களும் சீட் பெல்ட்களின் அவசியம் தொடர்பாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறோம். இது எங்கள் உயரதிகாரிகளின் முடிவு. அடுத்த 10 நாட்களும் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

மேலும் சமூக வலை தளங்கள் மற்றும் ரேடியோ போன்ற ஊடகங்கள் மூலமாகவும் இந்த விதிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். நவம்பர் 1ம் தேதியில் கார்களில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என நாங்கள் பிறப்பித்த உத்தரவு அனைவரையும் சென்றடையவில்லை. எனவே இந்த விதிமுறை தொடர்பாக நிறைய பேர் எங்களிடம் சந்தேகம் கேட்டு கொண்டுள்ளனர்.

எனவேதான் தற்காலிகமாக இந்த உத்தரவை தள்ளி வைத்துள்ளோம்'' என்றார். ஆனால் இது தற்காலிகமான ஒரு முடிவுதான் என்பதை அனைவரும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். போதுமான அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர், இந்த விதிமுறையை மிகவும் தீவிரமாக அமல்படுத்த காவல் துறையினர் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.

எனவே மும்பையில் கார்களில் பயணம் செய்யும் அனைவரும் தற்போது முதலே சீட் பெல்ட் அணிய தொடங்கி விடுவது நல்லது. மும்பையில்தானே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஏனெனில் இந்தியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளும் தற்போது சீட் பெல்ட் விதிமுறையில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








