பாவம்யா! கண்முன் தெரியாம கார் ஓட்டியதால் நடந்த கோர விபத்து! பலவீனமான இதயம் உள்ளவங்க வீடியோவை பாக்காதீங்க!
கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று மங்களூரு (Mangaluru). இங்கு தற்போது நடைபெற்றுள்ள பயங்கரமான சாலை விபத்து (Road Accident) ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சாலை விபத்து நேற்று (புதன் கிழமை) அரங்கேறியுள்ளது. சம்பவம் நடந்தபோது, பெண்கள் சிலர் குழுவாக பாதசாரிகளுக்கான நடைபாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த கார், அவர்கள் மீது மோதியது. அது ஹூண்டாய் இயான் (Hyundai Eon) கார் ஆகும்.

காம்லேஷ் பல்தேவ் என்பவர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார். இந்த கொடூர விபத்தில் ரூபாஸ்ரீ என்ற பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு 23 வயது மட்டுமே ஆகிறது. அதே நேரத்தில் இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், விபத்திற்கு காரணமான காம்லேஷ் பல்தேவ் காரை நிறுத்தவே இல்லை.
விபத்து நிகழ்ந்த பின்னர், அவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அருகில் இருந்த ஒரு கார் ஷோரூமில் ஹூண்டாய் இயான் காரை நிறுத்தி விட்டு, வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்துள்ளார். காவல் துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் அவர் இதை செய்ததாக கூறப்படுகிறது.
அவர் மீது தற்போது ஐபிசி (IPC) செக்ஸன் 279 (பொறுப்பற்ற முறையிலும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுதல்) உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரல் (Viral Video) ஆகி கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விசாரணை முடிவில், காம்லேஷ் பல்தேவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வலியுறுத்துகிறது. இது உண்மையிலேயே துரதிருஷ்டவசமான ஒரு நிகழ்வாகும். அவரது கவன குறைவால்தான் இந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் குடிபோதையில் இருந்தாரா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டூவீலர் அல்லது கார் என எந்வொரு வாகனமாக இருந்தாலும், டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால், கவனம் முழுவதும் சாலையில் மட்டுமே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற சாலை விபத்துக்கள் நிகழும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
வேக வரம்புகளை பின்பற்றுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் இது போன்ற சாலை விபத்துக்களை தவிர்க்கலாம். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், சாலை விபத்துக்கள் நடைபெற்று விட்டாலும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
இதன் மூலமாக உயிரிழப்புகளை தடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும்பட்சத்தில், உயிரிழப்புகள் தடுக்கப்படலாம். இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததும் ஒரு காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications