உலக நாடுகளே அதிரப்போகும் திட்டம் ரெடி! இஸ்ரோவின் செவ்வாய் கிரக பிளான் இது தான்!

இஸ்ரோவின் மங்கள்யான் 2 திட்டத்தில் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றையும் பயன்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது அதன்படி லேண்டர் தரை இறங்கியதும் அதில் இருக்கும் ஹெலிகாப்டர் வெளியே வந்து சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு பறந்து சுற்றி இருக்கும் விஷயங்களை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டருக்கு மார்பில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விண்கலத்தை அனுப்புவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் தொலை தொடர்புதான் செவ்வாய் கிரகம் சந்திரன் போல சுலபமாக தொடர்பு கொள்ளும் தூரத்தில் இல்லை. இதனால் இந்த தொலை தொடர்பை சிறப்பாக செய்வதற்காக மங்கள்யான் 2 ஏவுதலுக்கு முன்பாகவே தொலைத்தொடர்பு சாட்டிலைட் ஒன்றை ஏவவுள்ளது.

mangalyaan 2

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட்டை ஏவி பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் நடுவே அதை நிலை நிறுத்தி செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் சிக்னல்களை வாங்கி பூமிக்கு அனுப்புவதும் பூமியிலிருந்து வரும் சிக்கல்களை வாங்கி செவ்வாய் கிரகத்தில் உள்ள மங்கள்யான் விண்கலத்துக்கு அனுப்புவதும் பணியாக செய்ய வடிவமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் பூமியிலிருந்து ஒரு தகவலை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பினால் குறைந்தபட்சம் 3 நிமிடத்தில் இருந்து 22 நிமிடங்கள் வரை அந்த தகவல் செவ்வாய் கிரகத்திற்கு சென்ற எடுத்துக் கொள்ளும். இது பூமியும் செவ்வாய் கிரகமும் மிக குறைந்த தூரத்தில் இருக்கும் போது தான் சற்று விலகிப் போனால் 6 நிமிடம் முதல் 44 நிமிடங்கள் வரை கூட நேரம் எடுத்துக் கொள்ளும்.

mangalyaan 2

இதுபோக மங்கள்யான் 2 திட்டத்திற்காக ரோவர் ஒன்றையும் டிசைன் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. லேண்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும் அதிலிருந்து ரோவர் வெளியேறி அங்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு விதமான ஆய்வுகளை இஸ்ரோ செய்ய உள்ளது. இந்த லேண்டர் மற்றும் ரோவர் தற்போது டிசைன் செய்யப்படும் நிலையிலேயே உள்ளன. விரைவில் இது தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே தங்கள் லேண்டரை பத்திரமாக தரையிறக்கி ஆய்வு செய்துள்ளனர். தற்போது இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி தரை இறக்கி விட்டால் நிலவில் தடம் பதித்த மூன்றாவது நாடாக இந்தியா தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோவில் பல விண்வெளி ஆய்வாளர்கள் சேர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள். இதில் மங்கள்யான் 1 மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து தற்போது மங்கல்யான் 2 திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதுவும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 15, 2024, 7:00 [IST]
English summary
Mangalyaan 2 isro mars mission helicopter sky crane rover
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+