எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு தோணுச்சு... அவரா இது... காரை டெலிவரி எடுக்க நேரா ஷோரூமுக்கே போயிட்டாரு...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஹோண்டா எலவேட் (Honda Elevate), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுடன், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் இந்த காரின் ஆரம்ப விலை 11.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.74 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Manikandan Pattambi Buys Volkswagen Taigun

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் செயல்திறனை பொறுத்தவரையில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.0 லிட்டர் இன்ஜினின் பவர் அவுட்புட் 115 பிஎஸ் பவர் மற்றும் 178 என்எம் டார்க் ஆகும்.

அதே நேரத்தில் 1.5 லிட்டர் இன்ஜினின் பவர் அவுட்புட் 150 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் ஆக உள்ளது. இந்த காரில் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற பல்வேறு வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

Volkswagen Taigun

அதே நேரத்தில் பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் வியூ கேமரா மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த இந்த காரை பிரபல நடிகர் ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் மணிகண்டன் பட்டாம்பி (Manikandan Pattambi) ஆவார். புகைப்படங்களை பார்த்ததன் மூலம், இவரை எங்கேயோ பார்த்தது போன்று உள்ளதே என ஒரு சிலருக்கு தோன்றியிருக்கலாம். அதற்கு நாங்கள் விளக்கம் அளித்து விடுகிறோம்.

இவர் மலையாள திரையுலகில் பிரபலமாக உள்ள நடிகர்களில் ஒருவர் ஆவார். மலையாள தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் மணிகண்டன் பட்டாம்பி நடித்து கொண்டுள்ளார். எனவே நீங்கள் மலையாள திரையுலகை பின் தொடர்பவர் என்றால், மணிகண்டன் பட்டாம்பியை பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை, அவர் டெலிவரி எடுக்கும்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் பிரபல மனிதர்கள் மத்தியிலும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றாகும். மாதுரி தீக்ஸித் (Madhuri Dixit) மற்றும் ஜாக்கி ஷெராப் (Jackie Shroff) போன்றவர்களிடம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் உள்ளது. இந்த வரிசையில் மணிகண்டன் பட்டாம்பியும் இந்தியாவின் பிரபலமான ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்களின் உரிமையாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 31, 2024, 17:17 [IST]
English summary
Manikandan pattambi buys volkswagen taigun viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+