50 ஆண்டிற்கு முன் தாத்தாவின் சொத்தை பேரன் எப்படி மாற்றினார் பாருங்க! இப்படி யாராலையும் யோசிக்கவே முடியாதே!

50 ஆண்டுகளுக்கு முன் தன் தாத்தா ஓட்டி வந்த ஸ்கூட்டரை பேரன் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றிய சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 50 ஆண்டுகள் பழைய ஸ்கூட்டரை எப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ரக மாற்றினான் என்ற கதை மிக சுவாரசியமானதாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் சரம்ங்காதம். இவர் மணிப்பூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் புரோகிராம் படிப்பை படித்து வருகிறார். தற்போது 5வது செமஸ்டர் படித்து வரும் இந்த மாணவருக்கு அறிவியலில் மிகப்பெரிய அளவுக்கு ஆர்வம் இருந்தது. இவர் ஏற்கனவே ஒரு சாதாரண ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றி இருந்தார்.

manipur techie converts electric scooter

இந்நிலையில் கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் இவரது தாத்தா ஒரு பெட்ரோல் ஸ்கூட்டரை ஓட்டி வந்துள்ளார். தாத்தாவின் மரணத்திற்கு பிறகு இவரது மாமா ஒருவர் அதை பயன்படுத்தி வந்துள்ளார். பின்னர் அது பழைய ஸ்கூட்டராக மாறிவிட்டதால் அதை வீட்டில் ஒரு ஓரமாக போட்டுவிட்டு வேறு ஒரு ஸ்கூட்டரை வாங்கி பயன்படுத்த துவங்கி விட்டார்.

இந்த ஸ்கூட்டர் அவரது வீட்டில் ஒரு ஓரமாக துருப்பிடித்துக் கொண்டே இருந்து வந்துள்ளது. இதைப்பார்க்கும் போதெல்லாம் அவருக்கு இந்த கூட்டத்தை எப்படியாவது புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருந்தது. இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்து எப்படியாவது இந்த ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்ற வேண்டும் என நினைத்தார். இதற்காக இன்டர்நெட்டிலும் அருகில் உள்ள ஒர்க்ஷாப்பில் சென்று இதை எப்படி செய்வது என பல்வேறு ஆய்வுகளை செய்தார்.

manipur techie converts electric scooter

இந்த பெட்ரோல் ஸ்கூட்டரில் உள்ள இன்ஜின், கார்பரேட்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கழட்டிவிட்டு இந்த ஸ்கூட்டரை எெலக்ட்ரிக் ஸ்கூட்டர்ராக மாற்றுவதற்காக வெளியிலிருந்து எலெக்ட்ரிக் மோட்டார், ஸ்பீடு கண்ட்ரோலர், பேட்டரி உள்ளிட்ட கருவிகளை எல்லாம் வாங்கி இதில் பொருத்த துவங்கினார். ஆனால் இந்த கருவிகள் எல்லாம் இவருக்கு கிடைப்பது மிகவும் சுலபமாக இல்லை. இதற்காக எட்டு மாதங்கள் பல்வேறு இடங்களில் தேடி இந்த கருவிகளை தேடி கண்டுபிடித்து வாங்கினார்.

8 மாத போராட்டத்திற்கு பிறகு இந்த பழைய ஸ்கூட்டர் தற்போது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாறிவிட்டது. ஏற்கனவே இவர் வேறொரு ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றிய நிலையில் அதற்கு சமதான் இவி ஒன் என பெயரிட்டுள்ளார். ஏனெனில் இவரது தாத்தா பயன்படுத்தி வந்த ஸ்கூட்டருக்கு சமாதான் இவி2 என பெயரிட்டுள்ளார். சமாதான் என்பது புராணக் கதைகளின் படி பறக்கும் குதிரை என்ற அர்த்தமாகும்.

manipur techie converts electric scooter

மணிப்பூர் மாநில இளைஞரின் இந்த முயற்சியை பாராட்டி அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் இவருக்கு சான்றிதழை வழங்கி உள்ளார். இவரை ஊக்குவிக்கும் வகையில் இவரை பாராட்டி உள்ளார். மேலும் நம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் இவர் போல பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது இந்த செய்தி மாநிலத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து அம்மாநில போக்குவரத்து துறை வெளியிட்ட செய்தியில் யார் வேண்டுமானாலும் தங்கள் ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றிக் கொள்ளலாம். ஆல்பர்ட் செய்ததைப் போல ஒவ்வொரு இளைஞரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய ஸ்கூட்டரை இப்படியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்ற முயற்சி செய்யலாம். ஆனால் அதற்கு முன்னர் அதற்கான உரிய அனுமதியைப் பெற்ற வேண்டும் என விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் பலர் தங்கள் வீட்டில் உள்ள ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றுவது எப்படி என ஆய்வு செய்து வருகின்றனர். ஆன்லைனிலேயே இதற்கான பல விளக்க வீடியோக்கள் எல்லாம் உள்ளது. இதுபோக இப்படியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மாற்ற பல்வேறு கிட்டுகள் ஆன்லைனில் உள்ளன. அதை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்ற அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதை நீங்களே கொஞ்சம் முயற்சி தான் செய்துவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மாசுவை ஏற்படுத்தும் இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகம் முழுவதும் மாறிவரும் நிலையில் வாகனங்களும் நிச்சயம் எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்பொழுது நீங்கள் உங்கள் வாகனத்தை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றுவது ஒரு நல்ல ஐடியாவாக தான் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 12, 2024, 11:01 [IST]
English summary
Manipur techie converts grandfathers vintage two wheeler into electric scooter
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X