அவரா இது... உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் அடையாளமே தெரியுது... காஸ்ட்லியான காரா வாங்கி குவிக்கறாரு...

இந்தியாவில் நடிகர், நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு நடிகர் மனீஷ் பாலும் (Manish Paul) விதிவிலக்கு அல்ல. நடிகர் என்பதை கடந்து, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், மாடல், பாடகர் என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன.

இவரிடம் ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) போன்ற கார்கள் உள்ளன. இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த வரிசையில் தற்போது மற்றொரு விலை உயர்ந்த கார் ஒன்றை மனீஷ் பால் வாங்கியுள்ளார். அது மினி கன்ட்ரிமேன் (Mini Countryman) கார் ஆகும். இதுவும் சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றுதான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் விலை 49 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Manish Paul With His Mini Countryman

நடிகர் மனீஷ் பால் வாங்கியுள்ள மினி கன்ட்ரிமேன் காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 176 பிஹெச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.5 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை மினி கன்ட்ரிமேன் கார் பெற்றுள்ளது. நப்பா லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் என மினி கன்ட்ரிமேன் காரில், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

Manish Paul Buys Mini Countryman

அத்துடன் 5 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் போன்ற வசதிகளும், மினி கன்ட்ரிமேன் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. தான் புதிதாக வாங்கியுள்ள மினி கன்ட்ரிமேன் காரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில், மனீஷ் பால் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில், சன்யுக்தாவையும் (Sanyukta) நம்மால் காண முடிகிறது. இவர் மனீஷ் பாலின் மனைவி (Wife) ஆவார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த மினி கன்ட்ரிமேன் காரை, தங்கள் வீட்டிற்கு புதிதாக வந்துள்ள குழந்தை என நடிகர் மனீஷ் பால் வர்ணித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் நடிகர் மனீஷ் பாலை பல லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். எனவே அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. மினி கன்ட்ரிமேன், இந்திய பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு கார் ஆகும். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) போன்றவர்களும் மினி கன்ட்ரிமேன் காரை வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகர் மனீஷ் பால் வாங்கியுள்ள மினி கன்ட்ரிமேன் சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே இந்த காரில் விசாலமான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. எனவே மனீஷ் பால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த கார் சௌகரியமான பயணத்தை வழங்கும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் மினி நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக நடிகர், விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்கள் பலரும் மினி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன. இது பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் ஒரு அங்கம் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 18:46 [IST]
English summary
Manish paul buys mini countryman all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+