கார் வாங்க ஷோரூமுக்கே வந்த தேவதை... அவங்களா இது! நேர்ல பாத்ததும் ஊழியர்கள் எல்லாம் அழகுல சொக்கி போயிட்டாங்க!
குழந்தைகளின் கனவை பெற்றோர்கள் நிறைவேற்றுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பெற்றோர்களின் கனவை குழந்தைகள் நிறைவேற்றுவது என்பது, அனைவருக்கும் சற்று ஆச்சரியத்தை கொடுக்க கூடிய விஷயமாக இருக்கும். அதுவும் இளம் வயதிலேயே தங்களுடைய பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுபவர்கள், உண்மையிலேயே சாதனையாளர்கள்தான். அப்படி ஒரு பெரிய சாதனையை மனிஷா ராணி (Manisha Rani) தற்போது படைத்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வரக்கூடிய ஒரு பெண் ஆவார். இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும், இவரை 13 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்!
இன்னும் புரியும்படி சொல்வதென்றால், 1.30 கோடி பேர். மனிஷா ராணியின் கவர்ச்சிகரமான பதிவுகள், இளைஞர்கள் பலரையும் கவரக்கூடியதாக உள்ளன. எனவேதான் இன்ஸ்டாகிராமில், மனிஷா ராணியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அது மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகும். இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. முன்பு மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) என்ற பெயரில் இந்த கார் அழைக்கப்பட்டு வந்தது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்தான், பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற பெயரில் களமிறக்கப்பட்டுள்ளது.
இந்த கார் மனிஷா ராணி அவருக்காக வாங்கவில்லை. மாறாக அவரது தந்தைக்கு பரிசாக வழங்குவதற்காக வாங்கியுள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் ஷோரூமுக்கு நேரில் சென்று அவர் காரை டெலிவரி எடுத்துள்ளார். அப்போதே அவரது தந்தைக்கு அந்த காரை அவர் பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியை ஷோரூமில் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோவை (Viral Video), மனிஷா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவில், ''எனது தந்தையின் புதிய கார். மகளிடம் இருந்து அவருக்கு கிடைத்துள்ள புதிய பரிசு இது.
எனது தந்தையின் மற்றொரு கனவு நிறைவேறியுள்ளது. எனது தந்தையின் கனவுகள் எல்லாம் என்னுடைய கனவுகள். நான் அவருடைய கனவுகளை எல்லாம் நிறைவேற்றுவேன்'' என மனிஷா ராணி கூறியுள்ளார். இந்த வைரல் வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.
மனிஷா ராணி வாங்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரானது, டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) உள்ளிட்ட கார்களுடன் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 7.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அவை 111 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 131 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 117 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும்.
வசதிகளை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தந்தைக்கு இளம் வயதிலேயே மகள் புத்தம் புதிய காரை பரிசாக வழங்கியிருப்பது, உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். அதுவும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போன்ற ஒரு அருமையான காரை பரிசாக வழங்கியிருப்பது சிறப்பான ஒன்று என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








