இப்பவும் கூட அழகுல இவங்களை அடிச்சுக்க ஆளே இல்ல! போட்டோவை போட்டு எல்லாரையும் கெறங்கடிச்சுட்டாங்க!
திரைப்பட நடிகைகள் எல்லாம் பொதுவாக சொகுசு கார்களின் மீது ஆர்வம் கொண்டவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் விதிவிலக்காக பைக்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். அப்படிப்பட்ட நடிகைகளை நம்மால் விரல் விட்டு எண்ணி விட முடியும். இதில், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் மஞ்சு வாரியர் (Manju Warrier) குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் (BMW R1250 GS) பைக் ஒன்றை வைத்துள்ளார். இது அட்வென்ஜர் டூரர் (Adventure Tourer) ரகத்தை சேர்ந்த பைக் ஆகும்.
இந்த பைக்கின் விலை சுமார் 23 லட்ச ரூபாய் ஆகும். மஞ்சு வாரியர் இந்த பைக்கை வாங்குவதற்கு நடிகர் அஜித் குமார்தான் (Ajith Kumar) மிக முக்கியமான காரணம் ஆவார். நடிகை மஞ்சு வாரியர் அவ்வப்போது பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக்கில் சாகச பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த வரிசையில் சமீபத்திலும் அவர் ஆஃப் ரோடு சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் வேகமாக பரவி வருகின்றன.
பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக்கில், 1,245 சிசி ட்வின் சிலிண்டர் பாக்ஸர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7,750 ஆர்பிஎம்மில் 134 பிஹெச்பி பவரையும், 6,250 ஆர்பிஎம்மில் 143 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரபல மலையாள நடிகரான ஷோபின் ஷாகீரிடமும் (Soubin Shahir), இதே பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஷோபின் ஷாகீரிடம் இருப்பது இந்த பைக்கின் டிராபி எடிசன் ஆகும்.
இவர் மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel Boys) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். இவரும், மஞ்சு வாரியரும் கொச்சி (Kochi) நகர சாலைகளில் இரவு நேரங்களில், ஜாலியாக தங்கள் பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக்குகளில் ஊர் சுற்றியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பைக் ரைடிங் ஆசையை நிறைவேற்றுவதற்கு வயதோ அல்லது பாலினமோ தடையல்ல என்பதை மஞ்சு வாரியர் நிரூபித்துள்ளார். எனவே தங்கள் கனவுகளை நிறைவேற்ற போராடும் பெண்களுக்கு எல்லாம் நடிகை மஞ்சு வாரியர் ஒரு ரோல் மாடல் என்றால் மிகையல்ல.
மஞ்சு வாரியரிடம் பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் தவிர, மினி கூப்பர் எஸ்இ (Mini Cooper SE), ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) ஆகிய கார்களும் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








