மஞ்சும்மல் பாய்ஸ் படத்துல ஏன் சிகப்பு கலர் குவாலிஸ் வருது தெரியுமா? இது இத்தன நாளா யாருக்கும் தெரியாம போச்சே!

மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel Boys). ஒட்டுமொத்த தமிழ்நாடே (Tamil Nadu) கொண்டாடி கொண்டுள்ள ஒரு திரைப்படம் இது. அடிப்படையில் மலையாள திரைப்படமாக (Malayalam Movie) இருந்தாலும் கூட, தமிழ்நாட்டின் திரையரங்குகளை (Theaters) திருவிழாக்கோலமாக மாற்றிய பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு சேரும்.

மஞ்சும்மல் பாய்ஸ் லோ பட்ஜெட் (Budget) படம்தான். ஆனாலும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஸனில் (Box Office Collection), மஞ்சும்மல் பாய்ஸ் பட்டையை கிளப்பி கொண்டுள்ளது. குணா குகைகளில் (Guna Caves) உள்ள சாத்தானின் சமையலறை (Devil's Kitchen) என அழைக்கப்படும் குழியில் சிக்கி கொண்ட ஒரு நண்பனை காப்பாற்ற போராடும் மற்ற நண்பர்களை பற்றிய கதை இது.

Manjummel Boys Poster

இந்த செய்தியை வாசித்து கொண்டுள்ள நீங்கள், அனேகமாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருக்கலாம். மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் என்றவுடன், குணா குகைகள், டெவில்ஸ் கிச்சன், கண்மணி அன்போடு காதலன் பாடல் (Kanmani Anbodu Kadhalan Song) ஆகிய விஷயங்களை பற்றி மட்டுமே பலரும் பேசுகின்றனர்.

ஆனால் இந்த திரைப்படத்தில் பேசுவதற்கு மற்றொரு விஷயமும் உள்ளது. பலரும் கவனிக்க/பேச தவறிய அந்த விஷயம் டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis). இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இல்லை என்றாலும் கூட, டொயோட்டா க்வாலிஸ் காரின் புகழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

Manjummel Boys Toyota Qualis

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் காராக அறிமுகம் செய்யப்பட்டதுதான் குவாலிஸ். கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் டொயோட்டா குவாலிஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தளபதி விஜய் (Thalapathy Vijay) தற்போது சினிமாவில் உச்ச நிலையில் உள்ளார். அப்படி இருக்கும்போதே அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vetri Kalagam) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ள அவர், இனி அரசியலில் பயணம் செய்யவுள்ளார். அதேபோல் உச்ச நிலையில் இருந்தபோதே விற்பனையில் இருந்து விலகிய ஒரு கார்தான் டொயோட்டா குவாலிஸ்! டொயோட்டா நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 36,699 குவாலிஸ் கார்களை விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் டொயோட்டா குவாலிஸ் காரின் அதிகபட்ச வருடாந்திர விற்பனை எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பாக வேறு எந்தவொரு ஆண்டிலும், டொயோட்டா நிறுவனம் இவ்வளவு அதிகமான குவாலிஸ் கார்களை விற்பனை செய்தது கிடையாது. இருப்பினும் 2005ம் ஆண்டு ஜனவரி மாதமே டொயோட்டா குவாலிஸ் காரின் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டு விட்டது.

எனவே சரியாக 5 வருடங்கள் மட்டுமே டொயோட்டா குவாலிஸ் இந்தியாவில் விற்பனையில் இருந்தது. இதை தொடர்ந்து டொயோட்டா இன்னோவா (Toyota Innova) மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) ஆகிய கார்கள் எல்லாம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவை எல்லாம் டொயோட்டா குவாலிஸ் காரின் வழிதோன்றல்கள்தான்!

டொயோட்டா குவாலிஸ் என்றாலே, நம்பகத்தன்மை, சக்தி வாய்ந்த மற்றும் தரமான இன்ஜின்கள் ஆகியவைதான் நம் நினைவிற்கு வரும். பல வருடங்களுக்கு முன்பே விற்பனையில் இருந்து நீக்கப்பட்ட கார் என்றாலும் கூட, இந்திய சாலைகளில் இன்றளவும் நிறைய டொயோட்டா குவாலிஸ் கார்கள் ஓடி கொண்டுதான் உள்ளன.

பல லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய பிறகும் கூட, ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ் கார்கள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம். டொயோட்டா குவாலிஸ் காரை இந்திய மக்கள் விரும்பியதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு. அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் அது.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் கூட, நண்பர்கள் நிறைய பேர் சேர்ந்து ஒரு குழுவாகதான் கொடைக்கானலுக்கு (Kodaikanal) சுற்றுலா செல்வார்கள். இப்படி நிறைய பேர் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ஏற்றதாக இருந்ததும் கூட, டொயோட்டா குவாலிஸ் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றுதான்.

இந்திய சந்தையில் டொயோட்டா குவாலிஸ் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டது. அவை எஃப்எஸ் எனப்படும் ஃபேம்லி சலூன் (FS - Family Saloon), ஜிஎஸ் எனப்படும் க்ராண்ட் சலூன் (GS - Grand Saloon) மற்றும் ஜிஎஸ்-டி எனப்படும் க்ராண்ட் சலூன் டூரிங் (GS-T - Grand Saloon Touring) ஆகியவை ஆகும்.

இதில், ஃபேம்லி சலூன் வேரியண்ட், 10 சீட்டர் மாடல் ஆகும். 3+3+4 என்ற நிலையில் மொத்தம் 10 பேர் இந்த காரில் பயணம் செய்ய முடியும். அதாவது முதல் வரிசையில் 3 பேர், 2வது வரிசையில் 3 பேர், கடைசி மற்றும் 3வது வரிசையில் 4 பேர் என மொத்தமாக 10 பேர் அமர்ந்து பயணிக்க செய்யக்கூடிய வேரியண்ட் ஆக இது இருந்தது.

மறுபக்கம் க்ராண்ட் சலூன் வேரியண்ட், 8 சீட்டர் மற்றும் 10 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டது. இதன் 8 சீட்டர் மாடலில், 2+3+3 என்ற அமைப்பில் இருக்கைகள் வழங்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் 10 சீட்டர் மாடலில் ஃபேம்லி சலூன் வேரியண்ட்டை போன்று 3+3+4 என்ற அமைப்பில்தான் இருக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டுள்ள மஞ்சும்மல் பாய்ஸ் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் குழுவினரை பலரும் தொடர்ச்சியாக பேட்டி எடுத்து வருகின்றனர்.

அப்படி எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில், சிகப்பு கலர் (Red Colour) டொயோட்டா குவாலிஸ் காரில் நாங்கள் கொடைக்கானல் சென்றோம் என்று உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே திரைப்படத்திலும் சிகப்பு கலர் டொயோட்டா குவாலிஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 13, 2024, 14:04 [IST]
English summary
Manjummel boys why red colour toyota qualis used in movie interesting details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+