மன்மோகன் சிங் 1990களில் எப்படி இருந்திருக்காரு பாருங்க! கூட இருப்பது யாருனு தெரியுதா?

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan singh) இறப்பு நாட்டிற்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi)-இல் இருந்து பாமர மக்கள் வரையில் அனைவரும் மன்மோகன் சிங் அவர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் (Finance Minister) ஆக இருந்து, 2004இல் பிரதமராக பொறுப்பேற்ற மன்மோகன் சிங் 2014ஆம் ஆண்டு வரையில் இருமுறை பிரதமர் பதவி வகித்தார். நிதியமைச்சராக இருந்த சமயத்திலும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பல சிறப்பான யோசனைகளையும், திட்டங்களையும் வழங்கினார்.

1991ஆம் ஆண்டில் இருந்து 1996ஆம் ஆண்டு வரையில் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்த மன்மோகன் சிங் அந்த காலத்தில் பல முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அவற்றுள் தற்போது எங்களுக்கு நினைவிற்கு வருவது, மாருதி சுஸுகி எஸ்டீம் (Maruti Suzuki Esteem) கார் அறிமுக நிகழ்ச்சியில் அவர் கலந்துக் கொண்டது ஆகும்.

manmohan singh at auto expo

1994ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-இல் எஸ்டீம் கார் அறிமுகம் செய்யப்பட்டது. 1982இல் உருவான மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து வெளிவந்த முதல் காரான '800' மக்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்றது. மாருதி சுஸுகி 800 காரை மறைந்த மன்மோகன் சிங் அவர்கள் கூட 1996ஆம் ஆண்டில் வாங்கி கிட்டத்தட்ட 28 வருடங்களாக பயன்படுத்தி வந்தார். மேலும், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூட 800 காரை அப்போது வாங்கினார்.

இவ்வாறு, மிடில்-கிளாஸ் மக்களில் இருந்து விஐபிகள் வரையில் கவனத்தை ஈர்த்த 800 ஹேட்ச்பேக் (Hatchback) காருக்கு அடுத்து மாருதி சுஸுகியில் இருந்து வெளிவந்த ஆம்னி வேன் (Omni Van) மற்றும் ஜிப்ஸி (Gypsy) வாகனங்களும் மார்க்கெட்டில் பெரிய வெற்றியை ருசித்தன. அதேபோல், அதன்பின் 1990ஆம் ஆண்டில் 1 லிட்டர் என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி 1000 என்கிற பெயரிலான செடான் (Sedan) ரக காரும் மார்க்கெட்டில் பெரிய ஹிட்.

இதனால், அடுத்த 4 வருடங்களிலேயே 1000 காரை அடிப்படையாக கொண்ட் எஸ்டீம் காரை 1994இல் மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது. இந்த எஸ்டீம் காரின் அறிமுகத்திற்காககென ஸ்பெஷலாக அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் அதன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. 1994 ஆட்டோ எக்ஸ்போவை பார்வையிடுவதற்காக சென்றவர், அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்த பல்வேறு பிராண்ட்களின் தயாரிப்புகளை பார்வையிட்டார்.

அதன்படி, மாருதி சுஸுகியின் புதிய தயாரிப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு சென்றவர், அங்கு தனது புதுமையான தோற்றத்தினால் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்துக் கொண்டிருந்த எஸ்டீம் காரை கண்டு மெய்சிலிர்த்து போனார். மாருதி சுஸுகி 1000 செடான் காரை காட்டிலும், எஸ்டீம் செடான் கார் சற்று விலைமிக்கதாக உருவாக்கப்பட்டது. இதன் விலை 1994ஆம் ஆண்டிலேயே ரூ.3.81 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்பட்டது.

இது அந்த சமயத்தில் அதிக தொகை என்பதால், மக்களால் சொகுசு காராகவே எஸ்டீம் பார்க்கப்பட்டது. மாருதி 1000 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், அந்த சமயத்தில் எந்த காரும் கொண்டில்லாத புதுமையான தோற்றத்தை எஸ்டீம் கொண்டிருந்தது. எஸ்டீம் காரில் பொருத்தப்பட்ட 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 65 பிஎஸ் மற்றும் 90 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1994 ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக் கொண்ட பின்னரே 2 வருடங்கள் கழித்து 1996இல் மாருதி சுஸுகி 800 காரை வாங்கினார். 800 ஹேட்ச்பேக் காரை மன்மோகன் சிங் வாங்கியதற்கு கூட எஸ்டீம் காரின் தோற்றம் அவருக்கு பிடித்துப் போனது காரணமாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2024, 15:59 [IST]
English summary
Manmohan singh at maruti suzuki esteem car launch event rare video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+