மன்மோகன் சிங் அந்த நடவடிக்கையை எடுக்கலைனா மாருதி-சுஸுகி ரெண்டு பேராலும் இணைந்திருக்க முடியாதா..

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவால் காலமானார். தன்னுடைய 92 வயதிலேயே இவர் இன்னுலகை விட்டு மறைந்திருக்கின்றார். உடல் நலக்குறைவு காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி வியாழன் (டிசம்பர் 27) இரவு மறைந்தார். இவரின் மறைவிற்கு இந்திய தலைவர்கள் தொடங்கி உலக தலைவர்கள் வரை பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்.

இன்று இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் காணப்படும் இந்திய மோட்டார் வாகனத் துறை, மன்மோகன் சிங், மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களினாலேயே மிகப் பெரிய திருப்புமுனைக்கு ஆளாகியது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, 1991 ஆம் ஆண்டில், நீண்ட காலமாக வாகன துறையின் வளர்ச்சி மற்றும் திறனை கட்டுப்படுத்தும் விதமாக நடைமுறையில் இருந்து வந்த "லைசன்ஸ் ராஜ்" எனும் முறையை அகற்றி மிகப் பெரிய நடவடிக்கையை முன்னெடுத்தார்.

Impact of manmohan singh s policies on indian car firms

இதன் மூலமே இந்தியா வாகனத்துறை திறந்த மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சந்தையாக மாறத் தொடங்கியது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்த நடவடிக்கையே வழிவகுத்தது. மேலும், இந்த மாற்றமே இந்திய கார் உற்பத்தியாளர்களின் வளர்ச்சியிலும் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியது. குறிப்பாக மாருதி (Maruti) மற்றும் டாடா (Tata), அவர்களின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தி திறன்களை கணிசமாக மேம்படுத்துவதற்கும் மன்மோகன் சிங்கின் இந்த நடவடிக்கை அனுமதியளித்தது.

மேலும், மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய தாராளமயமாக்கல் கொள்கைகள் நிர்வாக இடையூறுகளை குறைப்பதில் பங்களித்தது. வாகன உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரி விகிதங்களையும், வட்டி விகிதங்களையும் மன்மோகன் சிங் குறைத்தார். இந்த மாற்றம் வணிகத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கியது. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை பெருமளவில் ஊக்குவித்தது.

குறிப்பாக, மாருதி மற்றும் டாடா போன்ற நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி அளவுகளை இதன் பின்னரே அதிகரிக்கச் செய்தனர். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் சர்வதேச சந்தைகளிலும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தும்படியான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். இதன் விளைவாக இந்திய மோட்டார் வாகனத் துறையில் மாருதி மற்றும் டாடா முக்கிய வீரர்களாக மாறினர்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் இவர்களின் ஆதிக்கம் பரந்து விரிந்துக் காணப்பட்டது. மன்மோகன் சிங்கின் சிறப்பு சாதனைகளில் ஒன்றாக மோட்டார் வாகனத் துறையில் வெளிநாடுகளின் நேரடி முதலீட்டை (FDI) ஆதரித்தது இருக்கின்றது. இந்த நடவடிக்கையாலேயே இந்திய நிறுவனங்களுக்கும், உலகளாவிய மோட்டார் வாகன ஜாம்பவான்களுக்கும் இடையே கூட்டணி அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகின.

மாருதி மற்றும் சுஸுகி கூட்டணி உருவாகியதும் இதற்கு பின்னால்தான். இந்த இணைவிற்கு பின்னரே இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளராக அது உயர்ந்தது. இதேபோல், 2008 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர்-ஐ டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது. இது இந்திய வாகனத் துறைக் கண்ட மாபெரும் மைல்கல் சாதனை ஆகும்.

இது சாதகமான சூழல்களை இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்கு மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கை மாற்றங்கள் வழங்கினாலும், அதேவேளையில், மிகப் பெரிய சவாலான சூழல்களையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது. ஆமாங்க, வெளிநாட்டு நிறுவனங்கள் பல இந்தியாவில் சுலபமாக காலடி வைத்ததால், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் திணற ஆரம்பித்தனர்.

அதேவேளையில், சவால்களை எதிர்கொண்டு அவர்கள் தங்களை தாங்களே போட்டிக்கு ஏற்ற மெருகேற்றத் தொடங்கினர். இதனால்தான், இப்போது இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சர்வதேச தரத்திற்கு வாகனங்களை தயாரிக்க முடிந்திருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் இந்திய வாகன உற்பத்தியாளர்களை புதுமைப்படுத்துவதற்கும் தகவமைத்துக்கொள்வதற்கும் இந்த சூழலே கட்டாயப்படுத்தியது. மேலும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளையும் இந்திய வாகன உற்பத்தியாளர்களை ஏற்றுக்கொள்ள செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மன்மோகன் சிங் மேற்கொண்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளே இந்திய மோட்டார் வாகனத் துறையை இப்போது வேற லெவலுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அவர் இந்த மாற்றத்தை முன்னெடுக்காமல் இருந்திருந்தால், மாருதி சுஸுகி கூட்டணி அமைந்திருக்காது, டாடாவால் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்க முடியாது. இதேபோல், இப்போது நாம் பயன்படுத்தும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் விற்பனைக்கு வந்திருக்காது. இதனால்தான் மன்மோகன் சிங்-கை இன்றும் வாகன துறை போற்றிக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2024, 5:00 [IST]
English summary
Manmohan singhs economic reforms reshape indian automotive industry with maruti and tata
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+