2.71கோடி ரூபா கார வாங்கினது அவரா! ஆதிபுருஷ் படத்துக்கு அப்புறம் அவரோட மவுசு இன்னும் அதிகமாயிருச்சு!
மனோஜ் முன்டாஷிர், இவரை அறியாதவர் இப்போது யாரும் இருக்க மாட்டார்கள். குறிப்பாக, நீங்கள் ஓர் சினிமா பிரியராக கட்டாயம் இவரை தெரிந்திருப்பீர்கள். இவர் ஓர் பிரபல இந்திய எழுத்தாளர் ஆவார். இதுதவிர, புகழ்பெற்ற பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் உள்ளிட்ட ரோல்களையும் அவர் ஆற்றி வருகின்றார்.
இவரே, ஆதிபுருஷ் திரைப்படத்தின் படாலாசிரியரும் ஆவார். அந்த படத்தில் வரும் தெரி மிட்டி, கல்லியான் மற்றும் கவுனஅ துஜே ஆகிய பாடல்களின் வரிகளுக்கு சொந்தக்காரர் இவரே ஆவார். இந்த நபரே தற்போது ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் திரும்பிப் பார்க்கச் செய்கின்ற வகையில் மிக மிக விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி அசத்தி இருக்கின்றார்.

அவர் புத்தம் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் (Mercedes Maybach S-Class) சொகுசு காரையே வாங்கி இருக்கின்றார். லக்சூரி செடான் ரக காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரின் விலை ரூ. 2.71 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
விலைக்கு ஏற்ப சிறப்பம்சங்களும் இந்த காரில் மிக மிக அதிகமாக வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால்தான், இந்திய தொழிலதிபர்கள் பலரின் பிரியமான சொகுசு கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதேபோல், பாலிவுட் திரைப்பிரபலங்கள் மத்தியிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு உண்டு.
உதாரணமாக இந்த கார் மாடலை அனில் கபூர், சாஹித் கபூல், பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, கங்கனா ரனாவத் மற்றும் பல நடிகை, நடிகர்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் பட்டியலிலேயே தற்போது மனோஜ் முன்டாஷிர் இணைந்திருக்கின்றார். இத்தனை பேரு இந்த காரை பயன்படுத்துறாங்களே அப்படி என்ன இருக்கு இந்த காருலனு நீங்க கேட்கலாம்.
இந்த காரில் ஓர் சொகுசு நட்சத்திர விடுதிக்கு இணையான அம்சங்களையே பென்ஸ் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, ஹீட்டிங் வசதிக் கொண்ட ஆர்ம் ரெஸ்ட் மற்றும் டோர் பேனல்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, இன்னும் பல அரிய வசதிகளும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதனால்தான், இந்த கார் இந்திய கோடீஸ்வரர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக விளங்குகின்றது. தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த கார் நம்மை பிரம்மிக்க செய்யும் வகையிலேயே இருக்கின்றது. அந்தவகையில், எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.8 அங்குல சென்ட்ரல் தொடுதிரை சிஸ்டம் மற்றும் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ட்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆகியவை வங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, மிக சிறந்த பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது மிக சிறந்த இசை அனுபவத்தை நமக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 516 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். அதேவேளையில், இதனால் 4.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை இந்த காரால் எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் இருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு இந்திய சொகுசு விரும்பிகள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே ஆதிபுருஷ் திரைப்பட பாடலாசிரியரின் கொள்முதல் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









