நடக்கும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய ரோபோட்!
நடக்கும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய எந்திர மனிதனை இங்கிலாந்தை சேர்ந்த மைக்ரோமேஜிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. 6 கால்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எந்திரத்தை நடக்கும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய எந்திர மனிதனாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மான்டிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ராட்சத உரும் கொண்ட எந்திர மனிதன் 1,900 கிலோ எடையும், 2.8 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கிறது. இதில், 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உயிர் கொடுக்கிறது. கால்கள் உள்பட பல இடங்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதால் எதிரில் இருக்கும் பொருட்களை கண்டுணர்ந்து செல்ல முடியும்.
லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டரின் ஹெக்ஸ்எஞ்சின் சாப்ட்வேர் மூலம் இதன் பேலன்ஸ் மற்றும் இயக்கம் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. மணிக்கு வெறும் 1 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்லும். இதன் நடுவில் இருக்கும் பகுதியில் ஒருவர் அமர்ந்து செல்ல முடியும். இது எந்தவொரு இடத்திலும் செல்லத்தக்க அம்சங்களை கொண்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்

உலகின் மிகப்பெரிய ரோபோட்



Click it and Unblock the Notifications








