தேவதை மாதிரி காரை வந்து வாங்கிட்டு போய்ட்டாங்க... இப்போதுதான் அந்த காருக்கே அழகு சேர்ந்திருக்கு!!

2024 பாரீஸ் ஒலிம்பிக் (Paris Olympic)-இல் இந்தியா சார்பில் பதக்கங்களை வென்றவர்களுள் ஒருவர் மனு பாக்கர் (Manu Bhaker). ஒலிம்பிக் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இவர் பெயர் தான் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. ஏனெனில், ஒன்றல்ல... இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்று மனு பாக்கர் ஆச்சிரியப்படுத்தினார். ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த ஒரே வீரர் 2 பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறை ஆகும். இந்த நிலையில், மனு பாக்கர் புதியதாக மாடர்ன் டாடா கார் ஒன்றை பரிசாக பெற்றுள்ளார். எதற்காக இந்த பரிசு என்பதையும், மனு பாக்கர் பெற்றுள்ள டாடா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்/ வீராங்கனைகளை ஊக்கப்படுத்த இந்திய அரசாங்கம் எப்போதும் தவறியதே இல்லை. இந்த முறை, கார்ப்பிரேட் நிறுவனங்களும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை தனது பங்கிற்கு பரிசு பொருட்களால் பாராட்டி உள்ளன. பெரும்பாலும், மஹிந்திரா நிறுவனம் தான் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சி காண்பது வழக்கம்.

manu bhaker gifted curvv ev

ஆனால் இந்த முறை, மற்றொரு முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் ஒலிம்பிக் பதக்கக்காரர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கையோடு ஓய்வு முடிவை அறிவித்த இந்திய ஹாக்கி கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் சமீபத்தில் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரை பரிசாக பெற்றார். டாடா மோட்டார்ஸ் சார்பில் அந்த பரிசு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது, இரு வெண்கல பதக்கங்களை தனிநபர் போட்டியில் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு பரிசாக டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் வழங்கப்பட்டுள்ளது. 22 வயதான மனு பாக்கர் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்றார். பரிசாக தனக்கு வழங்கப்பட்ட காருடன் மனு பாக்கர் நிற்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

manu bhaker gifted curvv ev

மனு பாக்கருக்கு இந்த கார் டெலிவிரி வழங்கப்பட்டிருக்கும் ஷோரூம் கொஞ்சம் ஸ்பெஷலானது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் பல மூலை முடுக்குகளிலும் ஷோரூம் உள்ளது. ஆனால், எலக்ட்ரிக் கார்களை மட்டும் விற்பனை செய்யும் ஷோரூம் டாடா மோட்டார்ஸிடம் ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

டெல்லிக்கு அருகே குருக்கிராம் நகரத்தில் செக்டர் 14 என்கிற பகுதியில் உள்ள அந்த டாடா இவி ஷோரூமில் இருந்துதான் மனு பாக்கர் தனது பரிசு காரை பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்களை டாடா.இவி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பரிசாக மனு பாக்கர் பெற்றிருப்பது கிளாஸியான ப்யூர் கிரே நிறத்திலான கர்வ் இவி எலக்ட்ரிக் கார் ஆகும்.

manu bhaker gifted curvv ev

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கர்வ் இவி எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்சமயம், இந்தியாவில் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார்கள் போதிய எண்ணிக்கையில் விற்பனையில் இல்லாததால், கர்வ் இவி கஸ்டமர்களை கவர்ந்திழுக்கும் என்கிற நம்பிக்கையில் டாடா நிறுவனம் இந்த காரை களமிறக்கியது. கர்வ் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.49 லட்சத்தில் இருந்து ரூ.21.99 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

45kWh மற்றும் 55kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்படுகின்றன. இதில் 45kWh பேட்டரியில் 502கிமீ மைலேஜையும், 55kWh பேட்டரியில் 585கிமீ மைலேஜையும் பெறலாம். கிரியேட்டீவ், அக்கம்ப்ளீஷ்டு, அக்கம்ப்ளீஷ்டு+, எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் கர்வ் இவி விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் எந்த வேரியண்ட் மனு பாக்கருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. பாராட்டும் வகையில் பரிசு பொருளாக வழங்கப்படுவதால், கர்வ் இவி காரின் டாப் எம்பவர்டு+ வேரியண்ட் வழங்கப்பட்டு இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான விலையுயர்ந்த பரிசு பொருட்கள், மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை வெகுவாக உற்சாகப்படுத்தும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 10, 2024, 11:31 [IST]
English summary
Manu bhaker gifted curvv ev electric car by tata motors check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X